இந்த ஆண்டின் டாப்- 10 கார் இன்டிரியர்கள்!!
காரின் வெளிப்புற டிசைனுக்கு எந்தளவிற்கு முக்கித்துவம் கொடுக்கப்படுகிறதோ, அதைவிட கூடுதலாக அதன் இன்டிரியருக்கும் முக்கியத்துவம் தரப்படுகிறது. காரில் பயணிக்கும்போது இனிதான அனுபவத்தை தருவதில் கார் இன்டிரியர் முக்கிய பங்கு வகிக்கிறது.
இதன் அடிப்படையில் அமெரிக்காவில் விற்பனையாகும் 41 கார் மாடல்களின் இன்டிரியரில் சிறந்த 10 கார் இன்டிரியர்களை தேர்வு செய்து அறிவித்துள்ளது வார்ட்ஸ்ஆட்டோ ஆட்டோமொபைல் இதழ்.
பயணிகளுக்கான வசதிகள், டிரைவருக்கான தகவல்கள், தரம், உதிரிபாகங்கள், பாதுகாப்பு, மதிப்பு, சொகுசு, டிசைன் என பல்வேறு விஷயங்களை அடிப்படையாக கொண்டு வார்ட்ஸ்ஆட்டோ வெளியிட்டிருக்கும் இந்த ஆண்டின் டாப்- 10 கார் இன்டிரியர்கள் ஸ்லைடரில் கொடுக்கப்பட்டுள்ளன.

செவர்லே கார்வெட் ஸ்டிங்ரே
மதிப்பீடுகளின் அடிப்படையில் செவர்லே கார்வெட் ஸ்டிங்ரே காருக்கு டாப்-10 பட்டியலில் முதலிடம் கிடைத்துள்ளது. இதில் இடம்பெற்றிருக்கும் கஸ்டமைஸ் செய்து கொள்வதற்கான விலை போட்டியாளர்களை ஒப்பிடும்போது மிக குறைவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2015 கிறைஸ்லர் 200சி
சிறப்பான விளக்கு அமைப்பு, லெதர் இருக்கைகள், சரியான அமைப்பிலான சென்ட்ரல் கன்சோல், வெனீர் வுட் ஃபினிஷ், இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், இடவசதி, செல்ஃப் பார்க்கிங் வசதி போன்றவற்றின் மூலம் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.

2014 ஜிஎம்சி சியரா டெனிலி
சிறந்த கட்டுமான தரம், சிறப்பான வசதிகள், ஏராளமான வசதிகளுடன் சென்ட்ரல் கன்சோல், குளிர்ச்சி மற்றும் வெப்பப்படுத்துதல் வசதி கொண்ட இருக்கைகள் போன்ற அம்சங்களின் மூலம் டாப்-10 பட்டியலில் மூன்றாம் இடத்தை பெற்றிருக்கிறது.

ஹூண்டாய் ஈக்கஸ் அல்டிமேட்
லிமோசின் கார்களுக்கு இணையான வசதிகள், சிறந்த இடவசதி, கட்டுமானத் தரம், குறைவான விலை போன்றவற்றால் பட்டியலில் 4ம் இடத்தை பிடித்திருக்கிறது.

2014 ஜீப் செரோக்கீ லிமிடேட்
ஆஃப் ரோடு மற்றும் நகர்ப்புற டிரைவிங்கிற்கு ஏற்ற கேபின், எளிதாக இயக்கும் வகையிலான கன்ட்ரோல்கள், மல்டி பர்பஸ் டச்ஸ்கிரீன் போன்றவை பட்டியலில் 5ம் இடத்தை பெற்று தந்துள்ளது.

2014 கியா சோல்
8 இஞ்ச் நேவிகேஷன் சிஸ்டம், பேக்கப் கேமரா, பானரோமிக் ரூஃப், இன்ஃபினிட்டி ஆடியோ சிஸ்டம், கவர்ச்சி போன்றவை கியா சோல் காருக்கு பட்டியலில் 6ம் இடத்தை பெற்று கொடுத்துள்ளது.

2014 மஸ்தா- 3
குறைவான விலை மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் மஸ்தா 3 காரில் ஆடி சொகுசு காரில் இருப்பது போன்ற சென்ட்ரல் கன்சோல், ரேடார் அடிப்படையில் இயங்கும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், லேன் வார்னிங் சிஸ்டம், கார்பன் ஃபைபர் டிரிம், ஹெட் அப் டிஸ்ப்ளே என சொகுசு கார் அம்சங்களை கொண்டிருக்கும் இந்த கார் பட்டியலில் 7 ஆம் இடத்தை பெற்றிருக்கிறது.

2014 மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்550
7 வண்ணங்களில் ஆம்பியன்ட் விளக்குகள், மசாஜ் இருக்கைகள், சாய்மான வசதி கொண்ட பின்புற இருக்கைகள், டிஸ்ப்ளே, நவீன பாதுகாப்பு வசதிகள் என பட்டியலில் 8 ஆம் இடத்தை பிடித்துள்ளது.

2014 ரோல்ஸ்ராய்ஸ் ரயீத்
சொகுசு, மதி்பு, எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்ட உட்புற கூரை போன்றவற்றின் மூலம் டாப்- 10 பட்டியலில் 9 ஆம் இடத்தை பெற்றிருக்கிறது.

2015 ஃபோக்ஸ்வேகன் ஜிடிஐ
கவர்ச்சியான, அழகாக டிசைன் செய்யப்பட்ட இன்டிரியர் கொண்ட குறைவான விலை கொண்ட மாடல் என்ற அடிப்படையில் டாப்-10 பட்டியலில் 10 ஆம் இடத்தை பிடித்துள்ளது இந்த கார். இதில், உங்களுக்கு பிடித்த கார் இன்டிரியர் எது?


Click it and Unblock the Notifications