2014ம் நிதி ஆண்டில் இந்தியாவிலிருந்து ஏற்றுமதியான டாப்-10 கார் மாடல்கள்

By Saravana

கடந்த நிதி ஆண்டில் ஏற்றுமதி செய்யப்பட்ட கார் மாடல்களில் டாப்- 10 இடங்களில் ஹூண்டாய் ஐ10 கார் முதலிடம் வகிக்கிறது. ஏற்றுமதியிலும், உள்நாட்டு விற்பனையிலும் ஹூண்டாய் ஐ10 காரின் விற்பனை கணிசமாக அதற்கு முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில், கணிசமாக குறைந்திருக்கிறது. இருந்தாலும், ஏற்றுமதியில் ஹூண்டாய் ஐ10 முதலிடம் பெற்றிருக்கிறது.

இதேபோன்று, கடந்த நிதி ஆண்டில் திடீர் திருப்பமாக ஏற்றுமதியில் இரண்டாவது இடத்தில் இருந்த மாருதியை நிசான் நிறுவனம் பின்னுக்குத் தள்ளியிருக்கிறது. இதேபோன்று, ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார் டாப்- 10 ஏற்றுமதி கார் லிஸ்ட்டில் இடம்பிடித்து அசத்தியிருக்கிறது.


டாப்-10 பட்டியல்

டாப்-10 பட்டியல்

கடந்த நிதி ஆண்டில் ஏற்றுமதி செய்யப்பட்ட டாப்- 10 பட்டியலில் பெரிய மாற்றங்கள் இல்லை. ஆனால், ஒரு சில கார் மாடல்கள் முன்னோக்கி வந்துள்ளன. ஒரு சில மாடல்கள் பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளன. கடந்த நிதி ஆண்டில் ஏற்றுமதியில் டாப்- 10 இடத்திற்குள் வந்த கார் மாடல்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

 நம்பர்-1 மாடல்

நம்பர்-1 மாடல்

2012-13ம் நிதி ஆண்டில் ஏற்றுமதியில் முதலிடம் பெற்ற ஹூண்டாய் ஐ10 கார் கடந்த நிதி ஆண்டிலும் தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டதுடன், ஹூண்டாய் நிறுவனத்தையும் நாட்டின் மிகப்பெரிய கார் ஏற்றுமதியாளர் என்ற பெருமையையும் பெற்றுத் தந்துள்ளது. 2012-13 நிதி ஆண்டில் 1,53,168 ஐ10 கார்கள் ஏற்றுமதியான நிலையில், கடந்த ஆண்டு 1,09,074 ஐ10 கார்கள் மட்டுமே ஏற்றுமதியாகியுள்ளன. இது 29 சதவீதம் சரிவு என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாமிடத்தில்...

இரண்டாமிடத்தில்...

ஏற்றுமதியில் நிசான் மைக்ரா கார் கடந்த நிதி ஆண்டிலும் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் இருந்தது. 2012-13 நிதி ஆண்டில் 69,063 மைக்ரா கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், கடந்த நிதி ஆண்டில் 78,383 மைக்ரா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த நிதி ஆண்டில் மைக்ரா காரின் ஏற்றுமதி 13 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

 மூன்றாமிடத்தில்...

மூன்றாமிடத்தில்...

மூன்றாமிடத்தை ஹூண்டாய் ஐ20 கார் தக்க வைத்துக் கொண்டுள்ளது. கடந்த 2012-13 நிதி ஆண்டில் 56,003 ஐ20 கார்கள் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், கடந்த நிதி ஆண்டில் 59,789 ஐ20 கார்கள் ஏற்றுமதியாகியுள்ளன. இது 7 சதவீதம் கூடுதல் என்பது குறிப்பிடத்தக்கது.

 நான்காமிடத்தில்...

நான்காமிடத்தில்...

நான்காம் இடத்தில் மாருதி ஏ ஸ்டார் கார் இடம்பெற்றுள்ளது. 2012-13 நிதி ஆண்டில் 53,811 ஏ-ஸ்டார் கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், கடந்த நிதி ஆண்டில் உற்பத்தி நிறுத்தப்பட்டுவிட்ட நிலையில், 45,193 ஏ ஸ்டார் கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

ஐந்தாமிடத்தில்...

ஐந்தாமிடத்தில்...

ஐந்தாம் இடத்தில் நிசான் சன்னி கார் உள்ளது. மைக்ராவும், சன்னி காரும் இணைந்து நாட்டின் இரண்டாவது பெரிய ஏற்றுமதியாளர் என்ற பெருமையை நிசானுக்கு பெற்றுத் தந்துள்ளன. 2012-13 நிதி ஆண்டில் 29,908 சன்னி கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், கடந்த நிதி ஆண்டில் 37,730 சன்னி செடான் கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. சன்னி காரின் ஏற்றுமதி 26 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஆறாமிடத்தில்...

ஆறாமிடத்தில்...

ஆறாம் இடத்தை ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார் கைப்பற்றியிருக்கிறது. 2012-13 நிதி ஆண்டில் 8,106 வென்ட்டோ கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், கடந்த நிதி ஆண்டில் 32,017 வென்ட்டோ கார்களை ஃபோக்ஸ்வேகன் ஏற்றுமதி செய்துள்ளது. 2012-13 நிதி ஆண்டில் ஏற்றுமதியில் 16-வது இடத்தில் இருந்த வென்ட்டோ கார் கடந்த நிதி ஆண்டில் 6-ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

ஏழாமிடத்தில்...

ஏழாமிடத்தில்...

7-ம் இடத்தில் உற்பத்தி நிறுத்தப்பட்ட ஹூண்டாய் ஆக்சென்ட் கார் பெற்றுள்ளது. 2012-13ம் ஆண்டில் 6ம் இடத்தில் இருந்த ஆக்சென்ட் கார் கடந்த நிதி ஆண்டில் 7-ம் இடத்திற்கு பின்தங்கியது. கடந்த ஆண்டு 29,107 ஆக்சென்ட் கார்களை ஹூண்டாய் ஏற்றுமதி செய்துள்ளது.

எட்டாமிடத்தில்...

எட்டாமிடத்தில்...

ஏற்றுமதியில் டாப்-10 கார் பட்டியலில் 8-ஆம் இடத்தை ஃபோர்டு ஃபிகோ கார் பெற்றுள்ளது. 2012-13ம் நிதி ஆண்டில் 28,895 ஃபிகோ கார்கள் ஏற்றுமதியானதுடன் 7ஆம் இடத்தில் இருந்தது. கடந்த நிதி ஆண்டில் 28,304 கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது. கடந்த நிதி ஆண்டில் ஏற்றுமதியில் சிறிய அளவு சறுக்கலை சந்தித்துள்ளது ஃபிகோ கார்.

ஒன்பதாமிடத்தில்...

ஒன்பதாமிடத்தில்...

கடந்த ஆண்டு டாப்-10 ஏற்றுமதி பட்டியலில் ஒன்பதாம் இடத்தை மாருதி ஆல்ட்டோ கார் பெற்றது. 2012-13 நிதி ஆண்டில் 27,428 ஆல்ட்டோ கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், கடந்த நிதி ஆண்டில் 20,858 ஆல்ட்டோ கார்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதை ஒப்பிடுகையில் 24 சதவீதம் குறைவு.

பத்தாமிடத்தில்...

பத்தாமிடத்தில்...

டாப்-10 பட்டியலில் கடைசி இடத்தில் ஹூண்டாய் இயான் கார் இருக்கிறது. 2012-13 நிதி ஆண்டில் 20,644 இயான் கார்கள் ஏற்றுமதியான நிலையில், கடந்த நிதி ஆண்டில் 19,296 இயான் கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இதை ஒப்பிடுகையில் 7 சதவீதம் ஏற்றுமதி குறைந்துள்ளது.

 மொத்த கார் ஏற்றுமதி

மொத்த கார் ஏற்றுமதி

2012-13 நிதி ஆண்டில் மொத்தம் 5,47,222 கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த நிதி ஆண்டில் 5,50,466 கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றன. கடந்த நிதி ஆண்டில் ஏற்றுமதி ஒரு சதவீதம் உயர்ந்துள்ளது.

Source: ET Auto

More from DriveSpark

Article Published On: Wednesday, June 4, 2014, 10:20 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+