ஆகஸ்ட் விற்பனையில் இந்தியாவின் டாப்- 10 கார் மாடல்கள்!

By Saravana

கடந்த இரு மாதங்களில் புதிய புன்ட்டோ எவோ, புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 மற்றும் புதிய ஹோண்டா மொபிலியோ போன்ற பல புதிய மாடல்கள் தொடர்ந்து விற்பனைக்கு வந்து கொண்டிருந்தாலும், டாப்-10 கார் பட்டியலில் பெரிய மாற்றங்கள் இல்லை. வழக்கம்போல் டாப்-10 பட்டியலில் உள்ள மாடல்களே ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டு வருவது கடந்த மாத பட்டியலிலும் பிரதிபலிக்கிறது.

புதிய ஹோண்டா சிட்டி கார் தயாரிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால் இந்த லிஸ்ட்டில் வலிய விலகிக் கொண்டுள்ளது. இதேபோன்று, ஹூண்டாய் எக்ஸென்ட் காரும் பின்னுக்குத் தள்ளப்பட்டது. இருப்பினும், சில கார் மாடல்கள் அதற்கு முந்தைய மாதத்தைவிட சிறப்பான எண்ணிக்கையை பதிவு செய்துள்ளன. டாப்- 10 பட்டியலில் இடம்பெற்றிருக்கும் கார் மாடல்கள் மற்றும் அதன் விற்பனை எண்ணிக்கை பலத்தை ஸ்லைடரில் காணலாம்.

டாப்- 10 கார்கள்

டாப்- 10 கார்கள்

அடுத்தடுத்த ஸ்லைடுகளில் டாப்-10 கார் மாடல்களின் விபரங்களை காணலாம்.

10.ஹூண்டாய் எலைட் ஐ20

10.ஹூண்டாய் எலைட் ஐ20

விற்பனைக்கு வந்த முதல் மாதத்திலேயே டாப்-10 பட்டியலுக்குள் இடம்பிடித்துவிட்டது புதிய ஹூண்டாய் ஐ20 கார். கடந்த மாதம் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து காலரை தூக்கிவிட்டுக் கொண்டுள்ளது. கடந்த மாதம் 6,627 ஹூண்டாய் எலைட் ஐ20 கார்கள் விற்பனையானது. அடுத்து வரும் மாதங்களிலும் இந்த புதிய மாடலின் விற்பனை எண்ணிக்கை சிறப்பாக இருக்கும் என நம்பலாம்.

9.மாருதி செலிரியோ

9.மாருதி செலிரியோ

டாப்-10 பட்டியலில் 9-வது இடத்தில் மாருதி செலிரியோ கார் இருக்கிறது. கடந்த மாதம் 6,656 செலிரியோ கார்கள் விற்பனையாகியுள்ளன. மேலும், செலிரியோவின் ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மாடலுக்கு தொடர்ந்து நல்ல வரவேற்பு இருந்து வருவதால் அடுத்து வரும் மாதங்களிலும் டாப்- 10 பட்டியலில் இந்த காருக்கு இடம் இருக்கும் என கூறலாம்.

8.ஹூண்டாய் கிராண்ட் ஐ10

8.ஹூண்டாய் கிராண்ட் ஐ10

இந்திய மார்க்கெட்டிற்கு வந்து ஓர் ஆண்டுகளை மிக வெற்றிகரமான நிறைவு செய்த களிப்புடன் டாப்-10 பட்டியலில் தொடர்ந்து இடம்பிடித்து வருகிறது ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார். கடந்த மாதம் 6,677 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

7. ஹூண்டாய் இயான்

7. ஹூண்டாய் இயான்

ஹூண்டாய் இயான் கார் 7வது இடத்தில் இருப்பதுடன் தொடர்ந்து டாப்- 10 பட்டியலில் இடம்பெற்று வருகிறது. கடந்த மாதம் 6,757 இயான் கார்களை ஹூண்டாய் விற்பனை செய்துள்ளது.

6.மஹிந்திரா பொலிரோ

6.மஹிந்திரா பொலிரோ

பல சவால்களை கடந்து டாப்- 10 பட்டியலில் இடம் ஒன்றை தக்க வைத்து வருகிறது மஹிந்திரா பொலிரோ. கடந்த மாதம் 6வது இடத்தில் இருந்தது. மேலும், ஆகஸ்ட்டில் 6,826 பொலிரோ எஸ்யூவிகள் விற்பனையாகின.

5. ஹோண்டா அமேஸ்

5. ஹோண்டா அமேஸ்

கடந்த மாதம் ஹோண்டா அமேஸ் காரின் விற்பனை சக்கை போடு போட்டுள்ளது. இதனால், ஜூலையில் 10வது இடத்தில் இருந்த ஹோண்டா அமேஸ் கடந்த மாதம் டாப்- 10 பட்டியலில் 5வது இடத்துக்கு முன்னேறியது. கடந்த மாதம் 9,198 அமேஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

4. மாருதி வேகன்- ஆர்

4. மாருதி வேகன்- ஆர்

முதல் 4 இடங்கள் மாருதிக்குத்தான் என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது. அதன்படி, வழக்கம்போல் 4வது இடத்தில் மாருதி வேகன்-ஆர் கார் உள்ளது. கடந்த மாதம் 13,133 வேகன் ஆர் கார்களை மாருதி விற்பனை செய்தது.

3. மாருதி ஸ்விஃப்ட்

3. மாருதி ஸ்விஃப்ட்

கடந்த மாதம் தனது ஆஸ்தான மூன்றாம் இடத்தில் ஸ்விஃப்ட் உள்ளது. கடந்த மாதத்தில் 17,176 ஸ்விஃப்ட் கார்கள் விற்பனையாகியுள்ளன.

2. மாருதி டிசையர்

2. மாருதி டிசையர்

கடந்த ஜூலையில் முதலிடத்தில் இருந்த டிசையர் கடந்த மாதம் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. கடந்த மாதம் 19,129 டிசையர் கார்களை மாருதி விற்பனை செய்துள்ளது.

1. மாருதி ஆல்ட்டோ

1. மாருதி ஆல்ட்டோ

கடந்த ஜூலையில் பின்னுக்குத் தள்ளப்பட்ட ஆல்ட்டோ கார் மீண்டும் முதலிடத்தை பிடித்ததுடன், விற்பனையும் 20,000ஐ கடந்தது. கடந்த மாதம் 21,553 ஆல்ட்டோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

பட்டியலில் மாற்றம்?

பட்டியலில் மாற்றம்?

கடந்த மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட புதிய டாடா ஸெஸ்ட் காம்பேக்ட் செடான் கார் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எனவே, செப்டம்பர் மாத டாப்- 10 கார் பட்டியலில் டாடா ஸெஸ்ட் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும், பண்டிகை காலம் துவங்கியுள்ளதால் கார் விற்பனையும் அதிகரித்திருக்கிறது. இது கார் நிறுவனங்களை உற்சாகமடைய வைத்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 10, 2014, 9:51 [IST]
English summary
Maruti Suzuki's small car Alto reclaimed the passenger car sales crown for August 2014.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+