இந்தியாவில் விற்பனையாகும் அழகான ஹேட்ச்பேக் கார்கள்!
வாடிக்கையாளர்கள் காரை தேர்வு செய்யும்போது மைலேஜ், வசதிகள், பெர்ஃபார்மென்ஸ் போன்றவற்றை பார்த்தாலும், பெரும்பாலானோர் வெளிப்புற டிசைனை வைத்தே தேர்வு செய்கின்றனர்.
அவ்வாறு இந்தியர்கள் மனதில் முக்கிய இடத்தை பிடித்து வைத்திருக்கும் கார் மாடல்களை இங்கே தொகுத்துள்ளோம். டிசைனில் மட்டுமின்றி, வசதிகள், பெர்ஃபார்மென்ஸ் போன்றவற்றிலும் இந்த கார்கள் பெயர் பெற்றவை. வாருங்கள் ஸ்லைடருக்கு செல்லலாம்.

ஃபோக்ஸ்வேகன் போலோ
எளிமையாகவும், நவநாகரீக தோற்றம் கொண்ட மாடல் ஃபோக்ஸ்வேகன் போலோ. இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் நன்மதிப்பை பெற்ற மாடலாகவும் விளங்குகிறது. தரமான கட்டுமானமும் இந்த காருக்கு வலு சேர்க்கிறது. சிறந்த எஞ்சின், வசதிகள் என தேர்வு செய்ய பல காரணங்களை கூறலாம். பன்னாட்டு நிறுவன பணியாளர்களின் முதல் சாய்ஸ் இதுவாகத்தான் இருக்கிறது. 2010ம் ஆண்டு ஐரோப்பாவின் சிறந்த காருக்கான விருதை வென்ற மாடல் இது.
போலோ காரின் முழு விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

ஹூண்டாய் எலைட் ஐ20
ஹூண்டாய் நிறுவனத்தின் டிசைனுக்கு பெருமை சேர்ந்த மாடல்களில் ஒன்றாக ஐ20 காரை கூறலாம். இந்த நிலையில், சமீபத்தில் இந்த காரின் புதிய மாடல் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. ஹூண்டாய் நிறுவனத்தின் புளூயிடிக் 2.0 டிசைன் தாத்பரியத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த புதிய மாடல் மிகச்சிறந்த அழகியலை கொண்டுள்ளது. குறிப்பாக, கருப்பு நிறத்திலான சி பில்லர் காருக்கு அதிக கவர்ச்சியை தருகிறது.
எலைட் ஐ20 கார் பற்றிய முழு விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

ஃபியட் புன்ட்டோ எவோ
பழைய புன்ட்டோவின் டிசைனில் பல மாறுதல்களை செய்து ப்ரெஷ் மாடலாக புதிய புன்ட்டோ எவோ காரை ஃபியட் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. புதிய முகப்பு மற்றும் பின்புறத்தில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள் இந்த புதிய மாடலுக்கு மார்க்கெட்டில் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது. குறிப்பாக, ஃபியட் கார்களின் ரசிகர்கள் உச்சி முகர்ந்து கொள்ளும் அளவுக்கு மாறியிருக்கிறது.
புதிய புன்ட்டோ எவோ காரின் முழு விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

மாருதி ஸ்விஃப்ட்
தனது ஈடு இணையற்ற டிசைனால் இந்தியர்களின் மனதில் அழுத்தமான இடத்தை பிடித்துவிட்ட ஸ்விஃப்ட் கார் விற்பனையிலும் சக்கை போடு போட்டு வருகிறது. பிற கார் மாடல்களிலிருந்து மிகத் தனித்துவமான டிசைன் அமைப்பை கொண்டிருப்பதே வாடிக்கையாளர்களிடம் தொடர்ந்து பேராதரவை பெற்று வருகிறது. மேலும், சிறப்பான பெர்ஃபார்மென்ஸ், அதிக மைலேஜ், மாருதியின் சர்வீஸ் கட்டமைப்பு போன்றவையும் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. விரைவில் இந்த காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.
ஸ்விஃப்ட் காரின் முழு விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

ஃபோர்டு ஃபிகோ
இந்தியாவில் ஃபோர்டு கார் நிறுவனத்துக்கு முகவரியை ஏற்படுத்திக் கொடுத்த மாடல் ஃபிகோ. ஸ்விஃப்ட் காருக்கு அடுத்து அதிகம் விரும்பப்படும் மாடல் இது. இந்தியாவின் சிறந்த காருக்கு விருதை வென்றதோடு, பல லட்சம் இந்திய வாடிக்கையாளர்களையும் பெற்று ஃபோர்டு நிறுவனம் நிலையான இடத்தை பெற கைகொடுத்தது. அடுத்த ஆண்டு புதிய தலைமுறை ஃபிகோ கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இருப்பினும், தற்போது உள்ள மாடலின் அழகியல் புதிய காரில் இருக்குமா என்பது சந்தேகத்திற்கிடமே. அந்தளவுக்கு ஓர் தன்னிகரில்லா டிசைன் கொண்ட மாடல் என்று கூறலாம். இந்த பட்டியலில் குறைவான விலை கொண்ட மாடலும் இதுதான்.
ஃபிகோ காரின் முழு விபரத்திற்கு இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் சாய்ஸ்
உங்களுக்கு பிடித்தமான அழகான கார் மாடலை கருத்துப் பெட்டியில் பதிவு செய்யலாம்.


Click it and Unblock the Notifications








