பாரிஸ் மோட்டார் ஷோவில் அறிமுகமாகும் டொயோட்டா கான்செப்ட்!
அடுத்த மாதம் நடைபெற இருக்கும் பாரிஸ் மோட்டார் ஷோவில் புதிய காம்பேக்ட் கிராஸ்ஓவர் கான்செப்ட் மாடலை டொயோட்டா அறிமுகம் செய்ய இருக்கிறது.
இந்த புதிய கான்செப்ட் மாடலின் டீசரை வெளியிட்டிருக்கும் டொயோட்டா, இதனை சி-எச்ஆர் என்ற பெயரில் அழைக்கிறது. அசத்தலான டிசைன் தாத்பரியங்களுடன் இந்த புதிய மாடலை டொயோட்டா அறிமுகம் செய்ய இருக்கிறது.

இந்த நிலையில், இந்தியாவில் காம்பேக்ட் எஸ்யூவிகள் மற்றும் கிராஸ்ஓவர் மாடல்களுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. ஆனால், இந்த செக்மென்ட்டில் தற்போது டொயோட்டாவிடம் மாடல் இல்லை. எனவே, இந்த புதிய காம்பேக்ட் கிராஸ்ஓவர் மாடல் இந்தியாவிலும் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது.
இல்லையெனில், இந்த மாடலை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் மாடல் இந்தியாவில் வரலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனால், டொயோட்டா சி- எச்ஆர் கான்செப்ட் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இதுதவிர, ஹைட்ரஜனில் இயங்கும் செடான் கார் உள்ளிட்ட பல புதிய மாடல்களை பாரிஸ் மோட்டார் ஷோவில் டொயோட்டா அறிமுகம் செய்ய உள்ளது.


Click it and Unblock the Notifications








