ஆஸ்திரேலியாவில் கார் தயாரிப்பை நிறுத்தும் டொயோட்டா!
2017ம் ஆண்டுடன் ஆஸ்திரேலியாவில் கார் உற்பத்திப் பணிகளை நிறுத்த உள்ளதாக டொயோட்டா கார் நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த 1960ம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியாவில் வர்த்தகத்தை டொயோட்டா மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், அந்நாட்டின் பண மாற்று விகிதம் மற்றும், தொழிலாளர்களின் ஊதிய விகிதம் அதிகரித்து வருவதன் காரணமாக கார் உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளது.

இந்த அறிவிப்பு அந்நாட்டை சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் சப்ளையர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், தொழிலாளர்களுக்கு போதிய உதவிகள் வழங்கப்படும் என்று டொயோட்டா வாக்கு கொடுத்துள்ளது.
மேலும், அந்நாட்டுக்கு அரசுக்கும் இந்த அறிவிப்பு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஏனெனில், அந்நாட்டில் உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்துள்ள மூன்றாவது கார் நிறுவனம் டொயோட்டா. ஏற்கனவே, ஃபோர்டு மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனங்களும் கார் உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்துள்ளன.
2017ம் ஆண்டுக்கு பின்னர் ஆஸ்திரேலியாவில் விற்பனை மற்றும் சர்வீஸ் நெட்வொர்க் பணிகளை கவனிக்கும் நிறுவனமாக டொயோட்டா செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








