9ந் தேதி விற்பனைக்கு வருகிறது புதிய டொயோட்டா எட்டியோஸ் கிராஸ்!

By Saravana

வரும் 9ந் தேதி டொயோட்டா எட்டியோஸ் கிராஸ் கார் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. லிவா காரின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட இந்த புதிய கிராஸ்ஓவர் ரக கார் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டது.

டிசைனில் கவரும் விதத்தில் இருப்பதால், ஆஃப் ரோடு பிரியர்கள் மத்தியில் இந்த கார் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த புதிய காருக்கான முன்பதிவும் ஏற்கனவே நடந்து வருகிறது. இந்த நிலையில், விற்பனைக்கு வரும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கொஞ்சம் பெருசு

கொஞ்சம் பெருசு

லிவா காரைவிட நீளத்தில் 120மிமீ, அகலத்தில் 40மிமீ, உயரத்தில் 45மிமீ கூடுதலாக இருக்கிறது புதிய எட்டியோஸ் கிராஸ். அளவில் பெரிதாகி இருப்பதோடு, பல்வேறு கூடுதல் ஆக்சஸெரீஸ்களும் பொருத்தப்பட்டு காரின் தோற்றம் கம்பீரமாக மாற்றப்பட்டுள்ளது.

எஞ்சின் ஆப்ஷன்கள்

எஞ்சின் ஆப்ஷன்கள்

இந்த காரில் 72 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 89 பிஎச்பி ஆற்றலை வழங்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்கள் கொண்ட மாடல்களில் கிடைக்கும். டீசல் மாடலில் 68 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

இன்டிரியர்

இன்டிரியர்

பியானோ பிளாக் இன்டிரியர் பினிஷிங், 2 டின் ஆடியோ சிஸ்டம், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள் போன்றவை இதன் சிறப்பம்சங்களாக இருக்கும்.

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

ரூ.7.75 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வர இருக்கிறது. லிவா காரைவிட ரூ.50,000 கூடுதல் விலையில் இந்த புதிய கார் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டியாளர்கள்

போட்டியாளர்கள்

தற்போது விற்பனையில் இருந்து வரும் ஃபோக்ஸ்வேகன் கிராஸ் போலோ மற்றும் விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் ஃபியட் அவென்டியூரா கார்களுக்கு இது நேரடி போட்டியை கொடுக்கும்

More from DriveSpark

Article Published On: Saturday, May 3, 2014, 10:32 [IST]
English summary
The Indian Market is witnessing launches after launches of new vehicles. Toyota will be launching their new crossover the Etios Cross in India on the 9th of May. The crossover is based on their Etios Liva hatchback.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+