டொயோட்டா எட்டியோஸ் கிராஸ் விற்பனைக்கு வரும் தேதி அறிவிப்பு!
அடுத்த மாதம் 7ந் தேதி டொயோட்டா எட்டியோஸ் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின் மூலம் லிவா காரின் அடிப்படையில் கிராஸ்ஓவர் ஸ்டைலுக்கு மாற்றப்பட்டிருக்கும் எட்டியோஸ் கிராஸ் அறிமுகம் செய்யப்பட்டது.
லிவா காரைவிட நீளத்தில் 120மிமீ, அகலத்தில் 40மிமீ, உயரத்தில் 45மிமீ கூடுதலாக இருக்கிறது புதிய எட்டியோஸ் கிராஸ். அளவில் பெரிதாகி இருப்பதோடு, பல்வேறு கூடுதல் ஆக்சஸெரீஸ்களும் பொருத்தப்பட்டு காரின் தோற்றம் கம்பீரமாக மாற்றப்பட்டுள்ளது.

இந்த காரில் 72 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் எஞ்சின் மற்றும் 89 பிஎச்பி ஆற்றலை வழங்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்கள் கொண்ட மாடல்களில் கிடைக்கும். டீசல் மாடலில் 68 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.
ஃபோக்ஸ்வேகன் கிராஸ் போலோ காருக்கு போட்டியாக வர இருக்கும் இந்த புதிய கார் ரூ.7.75 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வர இருக்கிறது. லிவா காரைவிட ரூ.50,000 கூடுதல் விலையில் இந்த புதிய கார் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








