2 புதிய வேரியண்ட்டுகளில் டொயோட்டா லிவா டீசல் அறிமுகம்!!
2 புதிய வேரியண்ட்டுகளில் டொயோட்டா லிவா டீசல் கார் விற்பனைக்கு வந்துள்ளது. இதற்கு முன்பு J, G மற்றும் V ஆகிய 3 பெட்ரோல் வேரியண்ட்டுகளிலும், JD ,GD ஆகிய 2 டீசல் வேரியண்ட்டுகளிலும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில், VD மற்ரும் VDSP என்ற 2 புதிய வேரியண்ட்டுகளில் இனி லிவா டீசல் கார் கிடைக்கும் என டீம் பிஎச்பி தளத்தில் வெளியிடப்பட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய விடி மற்றும் விடிஎஸ்பி வேரியண்ட்டுகளில் இருக்கும் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

டாப் வேரியண்ட்டுகள்
தற்போது புதிதாக வந்துள்ள இந்த வேரியண்ட்டுகளில் டாப் மாடல்களாக விற்பனை செய்யப்படும். எனவே, பல கூடுதல் வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

கூடுதல் அம்சங்கள்
இந்த புதிய வேரியண்ட்டுகளில் டபுள் குரோம் முன்பக்க கிரில், பனி விளக்குகள், ரியர் வைப்பர் வாஷர், 12 ஸ்போக் அலாய் வீல்கள், குரோம் வேலைப்பாடு கொண்ட பின்புற கதவு, ரியர் வியூ கண்ணாடியுடன் இணைந்த இண்டிகேட்டர் விளக்குகள் ஆகியவை கூடுதல் ஆக்சஸெரீஸ்களாக இருக்கும்.

இன்டிரியர்
டியூவல் டோன் இன்டிரியர், கதவுகளில் ஆர்ம்ரெஸ்ட்டுகள், வுட் பினிஷ், குரோம் பூச்சு கொண்ட கியர் நாப், புளூடூத் ஆடியோ சிஸ்டம் மற்றும் ரியர் டிஃபாகர் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக் அமைப்பு விடிஎஸ்பி டாப் வேரியண்ட்டில் உண்டு. லெதர் உறை போடப்பட்ட ஸ்டீயரிங் வீல், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள் ஆகியவையும் சேர்க்கப்பட்டுள்ளன.

விலை
டொயோட்டா லிவா டீசல் காரின் விடி வேரியண்ட் ரூ.6.72 லட்சத்திலும், விடிஎஸ்பி வேரியண்ட் ரூ.7.12 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








