விரைவில் புதிய எஞ்சினுடன் டொயோட்டா ஃபார்ச்சூனரின் பேஸ் மாடல்!
அக்டோபரில் புதிய டீசல் எஞ்சினுடன் டொயோட்டா ஃபார்ச்சூனர் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது. இது புதிய பேஸ் மாடலாக நிலைநிறுத்தப்பட உள்ளது.
மாதத்திற்கு சராசரியாக 1,500 டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவிகள் விற்பனை செய்யப்படுகின்றன. அதிகம் விற்பனையாகும் பிரிமியம் எஸ்யூவி மாடலாக விளங்கும் ஃபார்ச்சூனரில் புதிய பேஸ் மாடல் மூலம் விற்பனையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை டொயோட்டா பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எஞ்சின்
தற்போது டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியில் 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த மாடல் மூன்று விதமான வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.

மாடல்கள்
2 வீல் டிரைவ் மாடல் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடல்களிலும், 4 வீல் டிரைவ் மாடல் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

புதிய எஞ்சின்
விற்பனையை அதிகரிக்கும் வகையில், 2.5 லிட்டர் டீசல் எஞ்சின் கொண்ட புதிய பேஸ் வேரியண்ட்டை விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது டொயோட்டா. இந்த எஞ்சின் 141 பிஎச்பி பவரை அளிக்கும். வரும் வாரத்தில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் கூறுகின்றன.

குறைவான விலை மாடல்
தற்போது இந்தியாவில் ரூ.22.3 லட்சம் முதல் ரூ.23.5 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் ஃபார்ச்சூனர் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், புதிய பேஸ் வேரியண்ட் ரூ.20 லட்சத்தையொட்டிய விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இதன்மூலம், விற்பனை வெகுவாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபேஸ்லிஃப்ட் மாடல்
வரும் 2016ம் ஆண்டில் டொயோட்டா ஃபார்ச்சூனரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








