சஸ்பென்ஷனில் பிரச்னை: இந்தியாவில் டொயோட்டா கேம்ரி கார்களுக்கு ரீகால்!
சஸ்பென்ஷன் பிரச்னையை சரிசெய்து தருவதற்காக, குறிப்பிட்ட காலத்தில் தயாரிக்கப்பட்ட டொயோட்டா கேம்ரி செடான் கார்கள் திரும்ப அழைக்கப்பட உள்ளன.
டொயோட்டா கேம்ரி காரின் முன்புற சஸ்பென்ஷனில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த பிரச்னைக்காக உலக அளவில் 1.70 லட்சம் கேம்ரி கார்களை திரும்ப அழைக்க இருப்பதாக டொயோட்டா அறிவித்துள்ளது.

இதே பிரச்னைக்காக இந்தியாவிலும் கேம்ரி கார்கள் திரும்ப அழைக்கப்பட உள்ளன. கடந்த 2011ம் ஆண்டு மார்ச் முதல் ஜூலை வரை ஜப்பானில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட 119 கேம்ரி கார்களும் இந்த திரும்ப பெறும் அறிவிப்பில் இடம்பெற்றிருக்கிறது.
இதுதொடர்பாக, இந்தியாவிலுள்ள சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு முறைப்படி தகவல் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டொயோட்டாவின் அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையங்கள் வழியாக கேம்ரி கார்களில் சஸ்பென்ஷன் பிரச்னையை டொயோட்டா சரிசெய்து கொடுக்க உள்ளது.


Click it and Unblock the Notifications








