நாளை மறுதினம் புதிய டொயோட்டா எட்டியோஸ் செடான் அறிமுகம்?!

By Saravana

பண்டிகை காலத்தில் கார்களில் ஏதாவது புதிய விஷயத்தை காட்டி, வாடிக்கையாளர்களை கவர வேண்டிய கட்டாயத்திற்கு கார் நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன. அதனால், மாருதியாகட்டும், ஃபோக்ஸ்வேகனாகட்டும் தங்களது தயாரிப்புகளில் ஏதாவது மாற்றத்தை காட்டி புதிய மாடலாக அறிமுகம் செய்து வருகின்றன.

அப்படி, ஒன்றுமே இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது ஸ்பெஷல் எடிசன், லிமிடேட் எடிசன் மாடல்கள். இந்த பட்டியலில் லேட்டஸ்ட்டாக இணைய இருக்கும் மாடல்கள் டொயோட்டாவின் எட்டியோஸ் செடான் மற்றும் லிவா ஹேட்ச்பேக் கார்கள். இந்த இரு கார்களையும் புதுப்பொலிவு கொடுத்து விரைவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது டொயோட்டா.


புதுப்பொலிவு

புதுப்பொலிவு

நியூ எட்டியோஸ், நியூ லிவா என்ற பெயரில் வர இருக்கும் இந்த இரு கார்களிலும் ஹெட்லைட்டுகளுக்கு நடுவே தோரணம் தொங்கவிட்டது போன்ற கிரில் அமைப்பு மாற்றப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலாக புதிய டிசைனிலாக குரோம் அலங்காரத்துடன் கிரில் பொருத்தப்பட்டிருக்கிறது. ரியர் வியூ கண்ணாடிகளில் இன்டிகேட்டர்கள் கொண்டதாகவும் வருகின்றன.

 இன்டிரியர்

இன்டிரியர்

இன்டிரியரிலும் சில மாற்றங்களை காணலாம். டியூவல் டோன் இன்டிரியர், ஃபாக்ஸ் லெதர் கவர் போடப்பட்ட ஸ்டீயரிங் வீல், புதிய ஃபேப்ரிக் அப்ஹோல்ஸ்டரி ஆகியவை குறிப்பிடத்தக்க மாற்றங்களாக இருக்கும்.

 டாப் வேரியண்ட்

டாப் வேரியண்ட்

டாப் வேரியண்ட்டில் பார்க்கிங் சென்சார்கள், ஓட்டுனருக்கான காற்றுப் பை மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் ஸ்டான்டர்டு ஆக்சஸெரீஸ்களாக இடம்பெற்றிருக்கும்.

 எஞ்சின்

எஞ்சின்

எஞ்சினில் மாற்றங்கள் இருக்காது. லிவா காரில் தற்போது இருக்கும் அதே 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின்களுடனும், எட்டியோஸ் செடானில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கும். இரண்டிலும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக இருக்கும்.

 அறிமுகம்?

அறிமுகம்?

வரும் 15ந் தேதி புதுப்பொலிவுடன் எட்டியோஸ் செடான் வருகிறது. அதனைத் தொடர்ந்து லிவா ஹேட்ச்பேக் காரும் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. சற்று கூடுதல் விலையுடன் இந்த புதிய மாடல்களை டொயோட்டா விற்பனைக்கு கொண்டு வர உள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, October 13, 2014, 17:34 [IST]
English summary
Toyota is preparing to launch refreshed Toyota Etios sedan and the Toyota Etios Liva hatchback soon.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+