புதுப்பொலிவுடன் டொயோட்டா லிவா மற்றும் எட்டியோஸ் அறிமுகம்!
சிறிய மாற்றங்கள் மற்றும் கூடுதல் அம்சங்களுடன் டொயோட்டா லிவா மற்றும் எட்டியோஸ் செடான் கார்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
புதிய முன்பக்க கிரில், எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் வசதியுடன் ரியர் வியூ கண்ணாடிகள், 12 ஸ்போக்குகள் கொண்ட புதிய அலாய் வீல்கள், குரோம் கைப்பிடிகள் ஆகியவை முக்கிய மாற்றங்களாக இருக்கின்றன.

ஃபாக்ஸ்வுட் ஃபினிஷ் கொண்ட ஆர்ம் ரெஸ்ட், புதிய ஃபேப்ரிக் இருக்கைகள், உயரத்தை கூட்டிக் குறைக்கும் வசதியுடன் டிரைவர் இருக்கை போன்றவையும் சேர்க்கப்பட்டுள்ளன. பழைய 2 டின் ஆடியோ சிஸ்டம் என்றாலும், பின்புறத்தில் கூடுதலாக இரு ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டிருப்பதால், ஒலியின் தரம் முன்பைவிட மேம்படும்.
பார்க்கிங் சென்சார், சீட் பெல்ட் எச்சரிக்கை வசதிகளும் உள்ளன. எஞ்சினில் எந்த மாற்றங்களும் இல்லை. லிவா காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சினும், எட்டியோஸ் செடான் காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல்களிலும் கிடைக்கும்.

புதுப்பொலிவு பெற்ற டொயோட்டா லிவா கார் ரூ.4.76 லட்சம் முதல் ரூ.6.95 லட்சம் வரையிலும், எட்டியோஸ் செடான் கார் ரூ.5.74 லட்சம் முதல் ரூ.8.16 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








