லிவா பிரயோஜனமில்லை... புதிய ஹேட்ச்பேக் காரை களமிறக்க டொயோட்டா திட்டம்
லிவா விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லாததையடுத்து, புதிய ஹேட்ச்பேக் காரை களமிறக்குவதற்கு டொயோட்டா திட்டமிட்டுள்ளது.
எக்கானமிக் டைம்ஸ் இதழுக்கு பேட்டியளித்த டொயோட்டா நிறுவனத்தின் உயரதிகாரி நயோமி இஷி இந்த தகவலை சூசகமாக தெரிவித்துள்ளார்.

எட்டியோஸ் கிராஸுக்கு நல்ல வரவேற்பு
இன்னோவா, ஃபார்ச்சூனர் மற்றும் கரொல்லா ஆல்டிஸ் கார்கள் தம்தம் செக்மென்ட்டுகளில் விற்பனையில் முன்னிலையில் இருப்பதாக நயோமி தெரிவித்துள்ளார். மேலும், எட்டியோஸ் கிராஸ் கார் எதிர்பார்த்ததைவிட சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருவதாகவும் அவர் கூறினார். மாதத்திற்கு 1,500 எட்டியோஸ் கிராஸ் கார்களை விற்பனையாவதாக அவர் கூறினார்.

லிவா பிரயோஜனமில்லை
பிற கார்கள் சிறப்பான விற்பனையை பதிவு செய்து வந்தாலும், லிவா மற்றும் எட்டியோஸ் செடான் கார்கள் எதிர்பார்த்த அளவு விற்பனையில் சோபிக்கவில்லை என்று கூறியுள்ளார். ரூ.7 லட்சத்துக்கும் குறைவான கார்கள் மார்க்கெட்டில் 70 முதல் 80 சதவீத பங்களிப்பை வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புதிய கார் மாடல்
ரூ.7 லட்சத்திற்கும் குறைவான கார் மார்க்கெட்டில் லிவா சோபிக்கவில்லை என்றாலும், அந்த மார்க்கெட்டில் தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும், தேவைப்பட்டால் புதிய மாடல் குறித்து பரிசீலிப்போம் என்றும் அவர் கூறியுள்ளார். இதனால், ரூ.5 லட்சத்திற்கும் குறைவான விலை கொண்ட மாடலை டொயோட்டா அறிமுகம் செய்ய இருப்பது உறுதியாகியுள்ளது.

புதிய செடான் கார்
புதிய ஹேட்ச்பேக் கார் திட்டம் குறித்த டொயோட்டா அதிகாரி சூசகமாக தெரிவித்திருக்கும் நிலையில், புதிய செடான் காரையும் அந்த நிறுவனம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த புதிய கார் மாடல் ஹோண்டா சிட்டிக்கு நேர் போட்டியாக இருக்கும்.

சப்ளை பேஸ்
இந்தியாவிலிருந்து உதிரிபாகங்களை ஜப்பான் உள்ளிட்ட உலகில் உள்ள தங்களது ஆலைகளுக்கு பெற்று அனுப்புவதற்கான திட்டமும் இருக்கிறது. மேலும், புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தையும் இந்தியாவில் அமைக்க டொயோட்டா திட்டமிட்டுள்ளதையும் நயோமி தெரிவித்தார்.

உள்நாட்டு உதிரிபாகங்கள்
பிற போட்டி நிறுவனங்கள் பல கார் மாடல்களை இந்தியாவிலேயே உதிரிபாகங்களை பெற்று அசெம்பிள் செய்து வருகின்றன. இதே வழியில் இந்தியாவிலேயே உதிரிபாகங்களை பெற்று கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளோம். அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளுக்குள் எங்களது கார்களுக்கான பெரும்பாலான உதிரிபாகங்கள் இந்தியாவிலேயே பெற்று தயாரிக்க முடிவு செய்திருக்கிறோம் என்று பேட்டியில் நயோமி தெரிவித்தார். 48 வயதாகும் நயோமி டொயோட்டா நிறுவனத்தின் இளம் சிஇஓ.,க்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








