டீலர்களுக்கு திருப்தியான சேவையை தருவதில் டொயோட்டா முதலிடம்
டீலர்களுக்கு சிறப்பான சேவையை வழங்குவதில் டொயோட்டா கார் நிறுவனம் முதலிடம் வகிப்பதாக ஜேடி.பவர் ஏசியா பசிபிக் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. நாட்டின் முன்னணி கார் தயாரிப்பாளரான மாருதி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
ஆட்டோமொபைல் டீலர் அசோசியேஷன் அமைப்பும், ஜேடி.பவர் ஏசியா பசிபிக் ஆய்வு நிறுவனமும் இணைந்து இந்த ஆய்வை கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடத்தின. நாடு முழுவதும் உள்ள 658 கார் டீலர்களின் பொது மேலாளர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

சந்தைப்படுதத்துதல் மற்றும் விற்பனையில் கார் தயாரிப்பாளரின் செயல்பாடுகள், வாகன டெலிவிரி, விற்பனை குழு, வாரண்டி தரும் கால அளவு, பணியாளர் பயிற்சி உள்ளிட்ட 9 விதமான அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதிகபட்சம் 1000 புள்ளிகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டது.
அதில், டீலர்களுக்கு திருப்தியான சேவையை தருவதில், 925 புள்ளிகளை பெற்று டொயோட்டா கார் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது. 884 புள்ளிகளை பெற்று மாருதி நிறுவனம் இரண்டாம் பிடித்தது. இந்த ஆய்வில் தங்கள் கார் தயாரிப்பாளரிடம் சிறப்பான கார் மாடல்கள் இல்லை என்று சில டீலர்கள் குமுறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








