சாஃப்ட்வேர் பிரச்னை: ஹைபிரிட் பிரையஸ் கார்களுக்கு டொயோட்டா ரீகால்
இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட ஹைபிரிட் பிரையஸ் கார்களை திரும்ப அழைக்க இருப்பதாக டொயோட்டா அறிவித்துள்ளது.
பிரையஸ் கார்களில் ஹைபிரிட் அமைப்புக்கான சாஃப்ட்வேரில் பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், உலக அளவில் 1.9 மில்லியன் ஹைபிரிட் பிரையஸ் கார்களை டொயோட்டா திரும்ப அழைக்க உள்ளது.

இந்தியாவிலும் ஹைபிரிட் பிரையஸ் கார்கள் திரும்ப அழைக்கப்பட உள்ளன. மொத்தம் 167 ஹைபிரிட் பிரையஸ் கார்கள் இந்தியாவில் திரும்ப அழைக்கப்பட உள்ளன.
திரும்ப அழைக்கும் நடைமுறை நாளை துவங்க இருக்கிறது. இதுதொடர்பாக, வாடிக்கையாளர்களுக்கு தகவல் அனுப்பப்பட உள்ளதாகவும், பிரச்னையை இலவசமாக சரிசெய்து தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக ஒன்றரை மணி நேரத்தில் பிரச்னையை சரி செய்து தரப்பட்டு விடும் என்றும் டொயோட்டா கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications








