டொயோட்டா எட்டியோஸ் கிராஸுக்கு முன்பதிவு துவக்கம்!
டெல்லி ஆட்டோ எக்ஸ்போ மூலம் இந்திய மண்ணில் தடம் பதித்திருக்கும், டொயோட்டா எட்டியோஸ் கிராஸ் என்ற புதிய கிராஸ்ஓவர் ரக காருக்கு முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது.
லிவா, லிவா டிஆர்டி ஸ்போர்ட்டிவோ மாடல்களின் வரிசையில் லிவா காரின் கிராஸ்ஓவர் ரக கார் மாடலாக எட்டியோஸ் கிராஸ் விற்பனை செய்யப்பட உள்ளது. இரண்டு விதமான பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களிலும், மற்றும் ஒரு டீசல் எஞ்சின் ஆப்ஷனிலும் விற்பனைக்கு வந்திருக்கும் புதிய எட்டியோஸ் கிராஸ் காரின் கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

முக்கிய அம்சங்கள்
கிரில் கார்டு, சைடு கிளாடிங், டைமண்ட் கட் அலாய் வீல்கள், ரூஃப் ரெயில்கள், ரியர் ருஃப் ஸ்பாய்லர், இண்டிகேட்டர்களுடன் கூடிய பனி விளக்குகள், வைப்பருடன் கூடிய ரியர் டிஃபாகர், இண்டிகேட்டர்கள் கொண்ட ரியர் வியூ கண்ணாடிகள் ஆகியவை முக்கிய அம்சங்களாக கூறலாம்.

இன்டிரியர்
பியானோ பிளாக் நிறத்திலான இன்டிரியர் பினிஷிங் செய்யப்பட்டுள்ளது. சின்னம் பொறிக்கப்பட்ட ஃபேப்ரிக் இருக்கைகள், 2 டின் ஆடியோ சிஸ்டம், லெதர் கவருடன், சுவிட்சுகள் கொண்ட ஸ்டீயரிங் வீல் ஆகியவை இண்டியரில் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

எஞ்சின்
பெட்ரோல் மாடலில் 90 பிஎஸ் பவர் கொண்ட 1.5 லிட்டர் எஞ்சின் மற்றும் 80 பிஎஸ் பவர் கொண்ட 1.2 லிட்டர் எஞ்சினுடன் கிடைக்கும். இதேபோன்று, டீசல் மாடலில் 68 பிஎஸ் பவர் கொண்ட 1.4 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

வண்ணங்கள்
இன்ஃபெர்னோ ஆரஞ்ச், அல்ட்ராமரைன் புளூ, கிளாசிக் கிரே, சிம்பொனி சில்வர், செலஸ்டியல் பிளாக், வெள்ளை, வெர்மில்லியன் ரெட் மற்றும் ஹார்மோனி பீயேஜ் உள்பட 7 வண்ணங்களில் டொயோட்டா எட்டியோஸ் கிராஸ் கார் கிடைக்கும்.

பாதுகாப்பு அம்சங்கள்
எஸ்ஆர்எஸ் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை நிரந்தர பாதுகாப்பு அம்சங்களாக இடம்பெற்றிருக்கின்றன.

விலை அறிவிப்பு
வரும் மே மாதத்தில் புதிய டொயோட்டா எட்டியோஸ் கிராஸ் காரின் விலை விபரம் வெளியிடப்படும் என்று டொயோட்டா தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








