அடுத்த ஆண்டு ஹைட்ரஜன் கார் அறிமுகம்: உறுதிப்படுத்திய டொயோட்டா

By Saravana

அடுத்த ஆண்டு ஹைட்ரஜனில் இயங்கும் புதிய காரை விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக டொயோட்டா கார் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், அந்த புதிய ஹைட்ரஜன் கார் குறித்த சில முக்கிய தகவல்களையும் வெளியிட்டிருக்கிறது.

இங்கிலாந்தில் விற்பனை செய்யப்படும் அவென்சிஸ் காரின் அளவீடுகளில் மிட்சைஸ் காராக வரும் என டொயோட்டா தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு டோக்கியோ மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த எஃப்சிவி கான்செப்ட் காரின் டிசைன் தாத்பரியங்களை இந்த புதிய ஹைட்ரஜன் கார் ஒத்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் கூடுதல் சிறப்பம்சங்களையும், எஃபிசிவி கான்செப்ட் படங்களையும் ஸ்லைடரில் காணலாம்.

ரேஞ்ச்

ரேஞ்ச்

டொயோட்டாவின் புதிய ஹைட்ரஜன் கார் ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 800 கிலோமீட்டர் தூரம் வரை செல்லும் என்று டொயோட்டா தெரிவித்துள்ளது. மேலும், 3 முதல் 5 வினாடிகளில் எரிபொருள் நிரப்பிவிட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயல்திறன்

செயல்திறன்

0- 96 கிமீ வேகத்தை 10 வினாடிகளில் எட்டிவிடும். மேலும், இது இதன் எஞ்சினிலிருந்து கழிவு பொருளாக நீராவி மட்டுமே வெளிவரும் என்பதால் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும்.

மின் சப்ளை

மின் சப்ளை

அவசர சமயங்களில் இந்த காரிலிருந்து வீட்டிற்கு ஒரு வாரத்திற்கு தேவையான மின் சப்ளையை பெற முடியும்.

அறிமுகம்

அறிமுகம்

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் இந்த புதிய கார் முதலில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. மேலும், அம்மாகாண அரசின் நிதி உதவியுடன் இணைந்து எரிபொருள் நிலையங்களை அமைக்கும் முயற்சிகளை டொயோட்டா மேற்கொண்டுள்ளது.

உற்பத்தி

உற்பத்தி

முதல் லாட்டில் 10,000 கார்களை மட்டுமே உற்பத்தி செய்ய டொயோட்டா திட்டமிட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, April 17, 2014, 15:50 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+