விரைவில் வரும் புதிய மாருதி கார்கள் - சிறப்புத் தொகுப்பு

By Saravana

கார் மார்க்கெட்டில் முதலிடத்தில் இருந்து வரும் மாருதிக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது. இந்த நெருக்கடிகளை தவிர்த்துக் கொண்டு மார்க்கெட் பங்களிப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக புதிய மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

மேலும், காம்பேக்ட் எஸ்யூவி உள்ளிட்ட புதிய மார்க்கெட்டுகளிலும் கால் பதிக்க திட்டமிட்டிருப்பதும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. அடுத்த 12 மாதங்களில் மாருதி நிறுவனம் அறிமுகம் செய்ய திட்டமிட்டிருக்கும் புதிய மற்றும் ஃபேஸ்லிஃப்ட் கார் மாடல்கள் பற்றிய தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.


ஆவலைத் தூண்டும் மாருதி கார்கள்

ஆவலைத் தூண்டும் மாருதி கார்கள்

ஆவலைத் தூண்டும் புதிய மாருதி கார்கள் பற்றிய விபரங்களின் தொகுப்பை அடுத்த ஸ்லைடு முதல் காணலாம். ஒவ்வொரு கார் மாடலின் விபரங்களும் தலா இரண்டு ஸ்லைடுகளில் கொடுக்கப்பட்டுள்ளன.

மாருதி டிசையர் ஃபேஸ்லிஃப்ட்

மாருதி டிசையர் ஃபேஸ்லிஃப்ட்

ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு விட்ட நிலையில், அடுத்ததாக டிசையர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. டிசையர் ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் மாற்றங்கள் கண்டிருக்கும். முன்புறத்தில் புதிய க்ரோம் பட்டை கொண்ட ஒற்றை கிரில் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், பம்பர், ஹெட்லைட்டுகளின் வடிவமைப்பிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பக்கவாட்டில் மாறுதல்கள் இல்லையெனினும், புதிய அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.

இன்டிரியர்

இன்டிரியர்

இன்டிரியரை பொறுத்தவரை புதிய அப்ஹோல்ஸ்டரி, இருக்கைகள், புஷ் பட்டன் ஸ்டார்ட், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், ஆடியோ கன்ட்ரோல் சுவிட்டுகள் கொண்ட ஸ்டீயரிங் வீல், புளுடூத் வசதியுடன் புதிய மியூசிக் சிஸ்டம் போன்றவை குறிப்பிடத்தக்க அம்சங்களாக இருக்கும். அடுத்த மாதம் இந்த புதிய மாடல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.5 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரையிலான விலைப்பட்டியலில் வர இருக்கிறது.

மாருதி எக்ஸ்ஏ ஆல்ஃபா

மாருதி எக்ஸ்ஏ ஆல்ஃபா

2012ம் ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த ஆண்டு பிற்பகுதியில் இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

எஞ்சின்

எஞ்சின்

இந்த புதிய காம்பே்க்ட் எஸ்யூவியில் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு வரும் என்று தெரிகிறது. ரூ.6 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரையிலான விலைப்பட்டியலில் இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி எஸ் கிராஸ்

மாருதி எஸ் கிராஸ்

சிறப்பம்சங்கள் நிறைந்த ஓர் நிறைவான கிராஸ்ஓவர் மாடலாக இந்த காரை மாருதி அறிமுகம் செய்ய இருக்கிறது. தற்போது இந்தியாவில் சோதனை செய்யப்பட்டு வரும் இந்த புதிய கிராஸ்ஓவர் மாடல் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வர இருக்கிறது.

எஞ்சின் ஆப்ஷன்கள்

எஞ்சின் ஆப்ஷன்கள்

ஐரோப்பாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் எஸ்எக்ஸ் 4 அடிப்படையிலான எஸ் கிராஸ் மாடல்தான் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஆனால், டிசைனிலும், எஞ்சின் ஆப்ஷன்களிலும் மாற்றங்கள் இருக்கும். அடுத்த ஆண்டு முற்பாதியில் இந்த புதிய கிராஸ்ஓவர் வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.6.5 லட்சம் முதல் ரூ. 9 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி செலிரியோ டீசல்

மாருதி செலிரியோ டீசல்

பெரும் வெற்றி ருசித்திருக்கும் மாருதி செலிரியோ காரின் டீசல் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. செலிரியோவில் புதிய 800சிசி டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். செலிரியோவில் டீசல் மாடல் வரும்போது, அதன் விற்பனை வெகுவாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 செலிரியோ டீசல் மைலேஜ்

செலிரியோ டீசல் மைலேஜ்

செலிரியோ டீசல் மாடல் லிட்டருக்கு 35 கிமீ வரை மைலேஜ் தரும் என்று தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. 50 எச்பி முதல் 55 பிஎச்பி வரை பவர் கொண்டதாக இருக்கும். செவர்லே பீட் டீசலுக்கு நேரடி போட்டியாக இருக்கும். ரூ.5.0 லட்சம் ஆரம்ப விலையில் செலிரியோ டீசல் மாடல் விற்பனைக்கு வரும் என்ற தகவலால் வாடிக்கையாளர்களிடம் அதிக ஆவல் ஏற்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.

 மாருதி YRA ஹேட்ச்பேக் கார்

மாருதி YRA ஹேட்ச்பேக் கார்

ஸ்விஃப்ட் காருக்கு மேலாக நிலைநிறுத்தப்பட இருக்கும் இந்த புதிய கார் YRA என்ற குறியீட்டுப் பெயரில் சோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. பகல்நேர விளக்குகள் நிரந்தர ஆக்சஸெரீயாக வழங்கப்படும். ஏராளமான சிறப்பம்சங்கள் பொருந்தியதாக வர இருக்கும் இந்த புதிய மாடல் ஹூண்டாய் எலைட் ஐ20 மற்றும் விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய ஹோண்டா ஜாஸ் போன்ற கார்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

எஞ்சின் ஆப்ஷன்

எஞ்சின் ஆப்ஷன்

இந்த புதிய ஹேட்ச்பேக் காரில் 1.2 லிட்டர் மற்றும் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களிலும், 1.3 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வரும் என தகவல்கள் கூறுகின்றன. டீசல் எஞ்சின் ஸ்விஃப்ட்டைவிட அதிக பவரை அளிக்கும் விதத்தில் ட்யூன் செய்யப்பட்டிருக்கும். அடுத்த ஆண்டு மத்தியில் இந்த புதிய கார் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.5.5 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரையிலான விலையில் இந்த புதிய காரை எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, November 20, 2014, 13:42 [IST]
English summary
Here is the list of upcoming maruti cars in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+