ஃபோக்ஸ்வேகன் கார்களை வாங்குவதற்கு இதுவே சரியான தருணம்!

By Saravana

தீபாவளியையொட்டி அதிரடி சலுகைகளை ஃபோக்ஸ்வேகன் கார் நிறுவனம் அறிவித்திருக்கிறது. வரும் 31ந் தேதி வரை கார்களை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் இந்த சிறப்பு சலுகைகளை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எக்ஸ்சேஞ்ச் போனஸ், ஆக்ஸசெரீஸ் மீது தள்ளுபடி, இலவச இன்ஸ்யூரன்ஸ் என இந்த சலுகைகள் நீள்கிறது. போலோ, வென்ட்டோ, ஜெட்டா கார்களை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் இந்த சிறப்புச் சேமிப்புச் சலுகைகளை பெறலாம்.

கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

எக்ஸ்சேஞ்ச் போனஸ்

எக்ஸ்சேஞ்ச் போனஸ்

ஃபோக்ஸ்ஃபெஸ்ட் ஆஃபர் வழியாக பழைய கார்களை எக்ஸ்சேஞ்ச் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.30,000 வரை போனஸ் வழங்கப்படுகிறது.

தள்ளுபடி

தள்ளுபடி

ஆக்சஸெரீஸ் மீதும், மெர்ச்சன்டைஸ் பொருட்கள் மீது 20 சதவீதம் வரை தள்ளுபடிகளை பெறும் வாய்ப்பையும் வாடிக்கையாளர்கள் பெறலாம்.

போலோ

போலோ

பொதுவான சலுகைகள் தவிர்த்து போலோ ஹேட்ச்பேக் காருக்கு ஓர் ஆண்டுக்கான இலவச இன்ஸ்யூரன்ஸை வாடிக்கையாளர்கள் பெறலாம். போலோ காரின் பெட்ரோல் மாடல் ரூ.4.99 லட்சம் முதல் ரூ.6.07 லட்சம் வரையிலான விலையிலும், டீசல் மாடல் ரூ.6.27 லட்சம் முதல் ரூ.7.37 லட்சம் வரையிலான விலையிலும் விற்பனைக்கு கிடைக்கிறது. கிராஸ்போலோ கார் ரூ.7.90 லட்சம் விலையிலும், போலோ ஜிடி பெட்ரோல் மாடல் மற்றும் டீசல் மாடல் ரூ.7.99 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

வென்ட்டோ

வென்ட்டோ

வென்ட்டோ காருக்கு மொத்தமாக ரூ.90,000 வரை மதிப்பிலான சேமிப்பு சலுகைகளை பெற முடியும். இதுபோன்று, 0 சதவீத வட்டியில் கடன் திட்டத்தையும் தேர்வு செய்துகொள்ளலாம். வென்ட்டோ காரின் டீசல் மாடல் ரூ.7.44 லட்சம் முதல் ரூ.8.87 லட்சம் வரையிலான விலையிலும், பெட்ரோல் மாடலின் ஆட்டோமேட்டிக் மாடல் ரூ.9.35 லட்சம் முதல் ரூ.9.92 லட்சம் வரையில் விற்பனை செய்யப்படுகிறது. டீசல் மாடல் ரூ.8.57 லட்சம் முதல் ரூ.9.90 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கும். டீசல் ஆட்டோமேட்டிக் மாடல் ரூ.10.49 லட்சம் முதல் ரூ.10.94 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கிறது.

ஜெட்டா

ஜெட்டா

ஜெட்டா காருக்கு அதிகபட்சமாக ரூ.70,000 வரை சேமிப்புச் சலுகைகளை வாடிக்கையாளர்கள் பெறும் வாய்ப்புள்ளது. ஜெட்டா காரின் பெட்ரோல் மாடல் ரூ.13.60 லட்சம் முதல் ரூ.15.10 லட்சம் வரையிலும், டீசல் மாடல் ரூ.15.10 லட்சம் முதல் ரூ.19.60 லட்சம் வரையிலான விலையிலும் கிடைக்கிறது.

கூடுதல் விபரம்

கூடுதல் விபரம்

கூடுதல் விபரங்களுக்கு அருகிலுள்ள ஃபோக்ஸ்வேகன் கார் டீலரை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, October 9, 2014, 9:22 [IST]
English summary
German car maker Volkswagen has announced ‘Volksfest 2014,’ a 24-day mega-carnival where the company’s existing and prospective customers can avail of a range of valuable offers, exciting benefits and assured gifts. 
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+