பீட்டிலை துணை பிராண்டாக மாற்றுவதற்கு ஃபோக்ஸ்வேகன் குழுமம் திட்டம்

By Saravana

பீட்டிலை தனியாக பிரித்து புதிய துணை பிராண்டாக அறிவிக்க ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளதாக ஜெர்மனியிலிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. ஃபோக்ஸ்வேகன் பிராண்டில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் பீட்டில் காரின் பெயர் ஆட்டோமொபைல் வரலாற்றில் சிறப்புமிக்கது. இந்த நிலையில், பீட்டில் பிராண்டை ஃபோக்ஸ்வேகனிலிருந்து பிரித்து துணை பிராண்டாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பீட்டில் துணை பிராண்டு அறிமுகம் செய்யப்படும்பட்சத்தில், அந்த பிராண்டில் புதிய ஸ்போர்ட்ஸ் கூபே, மினிவேன், கிராஸ்ஓவர் ரக கார்கள் வெளியிடப்படும். மேலும், அதற்கான கான்செப்ட் நிலை கார் மாடல்களும் இப்போதே தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதுகுறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

பீட்டில் பிராண்டில் வருவதாக கருதப்படும் புதிய கார் மாடல்களை பற்றிய விபரங்கள் ஸ்லைடரில் தொடர்கிறது!

எந்த ரகத்தில் கார்கள்?

எந்த ரகத்தில் கார்கள்?

ஜெர்மனியை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் குழுமத்திடம் பல முன்னணி கார் பிராண்டுகள் உள்ளன. சாதாரண ரகம், சொகுசு ரகம், ஆடம்பர ரகம் என அனைத்து வகைகளிலும் கார் பிராண்டுகள் இருக்கும் நிலையில், பீட்டில் துணை பிராண்டில் எந்த வகை கார்கள் வெளியாகும் என்ற ஆவல் எழுந்துள்ளது. அதில், யூகிக்கப்படும் சில கார் மாடல்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

பீட்டில் டியூன் கான்செப்ட்

பீட்டில் டியூன் கான்செப்ட்

பீட்டில் காரை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட் சாஃப்ட் ஆஃப்ரோடர் ரக கார் கான்செப்ட் இது. இதிலும், 207 எச்பி பவரை அளிக்கும் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். ஸ்கிட் பிளேட், பம்பர் புரொடெக்டர் போன்ற ஆஃப்ரோடு ஆக்சஸெரீஸ்களை கொண்டிருக்கிறது.

இ-பக்ஸ்டர்

இ-பக்ஸ்டர்

ஸ்போர்ட்ஸ் கூபே ரகத்திலான இந்த காரும் பீட்டில் காரை அடிப்படையாகக் கொண்ட கான்செப்ட் மாடல். இதுவும் பீட்டில் பிராண்டில் வெளியிடப்பட உள்ளதாக யூகத்தின் அடிப்படையிலான செய்திகள் தெரிவிக்கின்றன.

 புல்லி கான்செப்ட்

புல்லி கான்செப்ட்

ஃபோக்ஸ்வேகனின் மினிபஸ் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் புதிய கான்செப்ட் இது. இதில்,6 பேர் மட்டுமே பயணம் செய்வதற்கான இருக்கை வசதி கொண்ட எம்பிவி மாடலாக இருக்கும். இது எலக்ட்ரிக் மோட்டாரில் இயங்கும். மேலும், பெட்ரோல், டீசல் எஞ்சின்களையும் பொருத்த முடியும்.

 எப்போது வெளிவரும்?

எப்போது வெளிவரும்?

ஒருவேளை இந்த கான்செப்ட் எம்பிவியை பீட்டில் பிராண்டில் வெளியிட ஃபோக்ஸ்வேகன் முடிவு செய்தால், 2018-19ம் ஆண்டில் விற்பனைக்கு வருமாம்.

More from DriveSpark

Article Published On: Friday, May 2, 2014, 16:22 [IST]
English summary
New rumours coming from Germany say that Volkswagen is looking to turn the Beetle into a separate sub-brand. The Beetle, which is a historic model, has traditionally been offered only in two-door and four-door forms. But in a bid to cash in on the popularity of the nameplate Volkswagen could extend the line-up.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+