பட்ஜெட் கார்களுக்காக புதிய பிராண்டை அறிமுகப்படுத்தும் ஃபோக்ஸ்வேகன்!
தரமான கார்களுக்கு பெயர்போன ஃபோக்ஸ்வேகன் குழுமம் தற்போது குறைந்த விலை கார்களுக்காக புதிய பட்ஜெட் பிராண்டை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
ஆடி, போர்ஷே, பென்ட்லீ, புகாட்டி, ஸ்கோடா உள்பட 12 கார் பிராண்டுகள் ஃபோக்ஸ்வேகன் கீழ் செயல்படுகின்றன. இந்த வரிசையில் 13வது நிறுவனமாக புதிய பட்ஜெட் கார்களுக்கான பிராண்டை ஃபோக்ஸ்வேகன் அறிமுகப்படுத்த உள்ளது.

தரமான கார்களுக்கும், தொழில்நுட்பத்துக்கும் பெயர் போன ஃபோக்ஸ்வேகன் குழுமம் புதிய பட்ஜெட் கார்களை அறிமுகப்படுத்த இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதிய பட்ஜெட் பிராண்டுக்கு நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்தால், வரும் 2016ம் ஆண்டு இறுதியில் அல்லது 2017ம் ஆண்டு துவக்கத்தில் புதிய பட்ஜெட் பிராண்டில் கார்கள் வெளியிடப்படும் வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








