இந்த ஆண்டு இறுதியில் ஃபோக்ஸ்வேகனின் காம்பேக்ட் எஸ்யூவி வருவதாக பரபரப்பு
இந்த ஆண்டு இறுதியிலேயே ஃபோக்ஸ்வேகனின் புதிய டைகுன் காம்பேக்ட் எஸ்யூவி கார் இந்திய மண்ணில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் கான்செப்ட் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டாலும், அது தயாரிப்பு நிலைக்குரிய பல அம்சங்களை பெற்றிருந்தது.
இந்த நிலையில், இந்த எஸ்யூவியை மிக விரைவாக கொண்டு வந்து தனது மார்க்கெட்டை சரிசெய்து கொள்வதற்கு ஆயத்தமாகி விட்டதாம் ஃபோக்ஸ்வேகன். எனவே, மிகுந்த நம்பிக்கையும், எதிர்கால கனவுகளுடன் இந்த எஸ்யூவி உற்பத்தியை துவங்குவதற்கான முயற்சிகளில் ஃபோக்ஸ்வேகன் இந்தியப் பிரிவு மும்முரமாக உள்ளது.

ஈக்கோஸ்போர்ட்டை விட சின்னது
3.86 மீட்டர் நீளம் கொண்ட இந்த எஸ்யூவி ஈக்கோஸ்போர்ட்டை விட நீளம் குறைவானது. 985 கிலோ எடை கொண்டது. 4 மீட்டருக்குள் வருவதால் வரிச்சலுகையை பெறும்.

பெட்ரோல் எஞ்சின்
இந்த காம்பேக்ட் எஸ்யூவியில் 3 சிலிண்டர்கள் கொண்ட 1.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த எஞ்சின் 110 பிஎஸ் பவரையும், 175 என்எம் டார்க்கையும் அளிக்கும். இது ஈக்கோஸ்போர்ட்டின் ஈக்கோபூஸ்ட் எஞ்சின் கொண்ட மாடலுக்கு நேரடியாக போட்டியை கொடுக்கும். மேலும், லிட்டருக்கு 21 கிமீ மைலேஜ் தரும் என்பது கவனிக்கத்தக்கது.

டீசல் மாடல்
டீசல் மாடலில் 3 சிலிண்டர் கொண்ட 1.4 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். டைரக்ட் இன்ஜெக்ஷன் தொழில்நுட்பத்துடன், டர்போசார்ஜர் துணையுடன் செயல்திறனை காட்டும். இந்த புதிய எஸ்யூவி மணிக்கு 185 கிமீ டாப் ஸ்பீடு கொண்டதாக இருக்கும்.

பிரிமியம் இன்டிரியர்
இந்த காம்பேக்ட் எஸ்யூவியின் இன்டிரியர் மிக பிரிமியம் அம்சங்கள் கொண்டதாக இருக்க வேண்டும் என்று ஃபோக்ஸ்வேகன் முடிவு செய்துள்ளது. வசதிகளுடன் மிக சொகுசான அம்சங்களும் இடம்பெற்றிருக்கும்.

ரிலீஸ்
இந்த ஆண்டு இறுதியில் இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவியின் விலை உள்ளிட்ட பல முக்கிய விபரங்களை ஃபோக்ஸ்வேகன் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








