முடியல... இந்தியாவுக்கு டாடா காட்டிய ஃபோக்ஸ்வேகன் டூரெக்!
போட்டி போட முடியாமல் பின்தங்கிய, டூரெக் எஸ்யூவியின் விற்பனையை சத்தமில்லாமல், இந்தியாவில் விலக்கிக் கொண்டுள்ளது ஃபோக்ஸ்வேகன்.
இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட்டு வந்த இந்த சொகுசு எஸ்யூவி மாடல், ஆடி, பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ் பென்ஸ் போன்ற நிறுவனங்களின் தயாரிப்புகளுடன் போட்டி போட முடியவில்லை.

இந்திய வாடிக்கையாளர் ஆடி, பிஎம்டபிள்யூ, பென்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளை அந்தஸ்தாக கருதுகின்றனர். அதற்கு இணையான அம்சங்கள், விலை கொண்ட ஃபோக்ஸ்வேகன் டூரெக் எஸ்யூவியை சீந்துவாரில்லை. எனவே, இந்த எஸ்யூவியின் விற்பனையை சத்தமில்லாமல் நிறுத்தியுள்ளது ஃபோக்ஸ்வேகன்.
இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வந்த மாடலில் 3.0 லிட்டர் வி6 டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் விற்பனையில் இருந்தது. இந்த எஞ்சின் 240 பிஎச்பி பவரையும், 550என்எம் டார்க்கையும் அளிக்கும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டது.
ஸ்லோவாக்கியா நாட்டிலுள்ள ஃபோக்ஸ்வேகன் ஆலையிலிருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. சிறந்த கட்டுமானம், செயல்திறன் மிக்க எஞ்சின், வசதிகள் என அனைத்திலும் சிறப்பான எஸ்யூவியாக இருந்தாலும், விலைதான் எதிரியாகவிட்டது. இறக்குமதி செய்து விற்பனையானதால், வரி அதிகம் போடப்பட்டதால், வாடிக்கையாளர்களை கவரவில்லை.


Click it and Unblock the Notifications








