இந்தியாவில் 7ம் ஆண்டு கொண்டாட்டம்... ஃபோக்ஸ்வேகன் கார்களுக்கு ஆஃபர்!
இந்திய மார்க்கெட்டில் கால் பதித்து 7 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடும் விதத்தில், கார்களுக்கு சிறப்புச் சலுகைகளை ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
போலோ, வென்ட்டோ மற்றும் ஜெட்டா கார்களுக்கு இந்த சிறப்புச் சலுகைகளை குறிப்பிட்ட காலச் சலுகையாக வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலோ காருக்கு ரூ.18,000 வரையில் தள்ளுபடியையும், ரூ.8,888 மாதத் தவணைத் திட்டத்தில் பெற்றுக் கொள்ளும் சிறப்பு கடன் திட்டத்தையும் ஃபோக்ஸ்வேகன் அறிவித்துள்ளது.
வென்ட்டோ செடான் காருக்கு இலவச இன்ஸ்யூரன்ஸ், இரண்டு ஆண்டுகளுக்கான இலவச ஆண்டு பராமரிப்பு திட்டம் போன்ற சிறப்புச் சலுகைகளை பெறும் வாய்ப்புள்ளது. மேலும், மூன்றாம் ஆண்டுக்கான வாரண்டியையும் ஃபோக்ஸ்வேகன் வழங்குகிறது. இதுதவிர்த்து, அதிகபட்சமாக ரூ.30,000 எக்ஸ்சேஞ்ச் போனசாகவும் பெற முடியும்.
ஜெட்டா காருக்கு ரூ.50,000 தள்ளுபடியையும், ரூ.30,000 எக்ஸ்சேஞ்ச் போனசையும் வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. கூடுதல் விபரங்களுக்கு அருகாமையிலுள்ள ஃபோக்ஸ்வேகன் டீலரை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications