போரடித்துவிட்ட ஜெட்டாவுக்கு புதுப்பொலிவு கொடுக்கும் ஃபோக்ஸ்வேகன்!
இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு சில ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில், எவ்விதமான மாறுதல்களும் இல்லாமல் ஃபோக்ஸ்வேகன் ஜெட்டா விற்பனை செய்யப்படுகிறது. விற்பனையில் திராணியை காட்டாததால், ஃபோக்ஸ்வேகனும் இந்த காருக்கு அதிக முக்கியத்துவத்தை கொடுக்கவில்லை.
இந்த நிலையில், சந்தை போட்டியை கருதியும், வாடிக்கையாளர்களை கவரும் விதத்திலும் ஜெட்டாவுக்கு புதுப்பொலிவு கொடுக்க ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது. நியூயார்க் ஆட்டோ ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த புதிய ஜெட்டா மாடலின் அடிப்படையில், இந்தியாவுக்கான ஜெட்டா மாடலில் புதுப்பொலிவு கொடுக்கப்பட உள்ளது.

ஹெட்லைட், பம்பர் டிசைனில் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும். பகல்நேர ரன்னிங் விளக்குகளும் கொடுக்கப்பட உள்ளன. இன்டிரியரில் அதிக மாற்றங்களை செய்ய ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது. 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் 10 எச்பி கூடுதல் பவர் கொண்டதாக இருக்கும்.

இந்த புதிய ஃபோக்ஸ்வேகன் ஜெட்டா நிச்சயம் வாடிக்கையாளர்களை கவரும் அம்சங்களை கொண்டிருக்கும் என ஃபோக்ஸ்வேகன் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








