இந்தியாவுக்கு புதிய பட்ஜெட் பிராண்டில் கார்கள்: ஃபோக்ஸ்வேகன் ஆய்வு

By Saravana

இந்தியாவில் புதிய பட்ஜெட் பிராண்டில் கார்களை அறிமுகம் செய்வது குறித்து ஃபோக்ஸ்வேகன் குழுமம் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.

ஜெர்மனியை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் குழுமம் தற்போது ரூ.5 லட்சத்திற்கும் அதிகம் விலையுள்ள கார் மாடல்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. ஆனால், ரூ.5 லட்சத்திற்கும் குறைவான விலை கொண்ட கார் மாடல்களுக்கு இந்திய மார்க்கெட்டில் அதிக வர்த்தக வாய்ப்பு உள்ளது.

Volkswagen Car

அதன் பங்களிப்பும் கணிசமாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு ரூ.5 லட்சத்திற்கும் குறைவான விலை கொண்ட கார்களை புதிய பிராண்டில் அறிமுகம் செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், தனது பிராண்டு இமேஜ் பாதிக்காது என்றும் கருதுகிறது.

டட்சன் பிராண்டில் நிசான் நிறுவனம் குறைவான விலை கார்களை அறிமுகம் செய்து வருவது போன்றே, புதிய பிராண்டில் பட்ஜெட் பிராண்டில் கார்களை அறிமுகம் செய்வதற்கான சாதக, பாதகங்களை ஆராய்ந்து வருகிறது. தனது சீன பார்ட்னருடன் இணைந்து புதிய பட்ஜெட் பிராண்டை அறிமுகம் செய்வதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளது.

அதேசமயத்தில், இந்தியாவிலும் புதிய பட்ஜெட் பிராண்டில் கார்களை அறிமுகம் செய்வது குறித்தும், அதற்கான வர்த்தக வாய்ப்புகள் குறித்தும் ஃபோக்ஸ்வேகனின் இந்தியப் பிரிவும் தீவிர ஆய்வுகளை நடத்தி வருகிறது. அடுத்த ஓர் ஆண்டிற்குள் புதிய பட்ஜெட் பிராண்டு குறித்து ஃபோக்ஸ்வேகன் குழுமம் முடிவு எடுத்துவிடும். அப்படி, புதிய பட்ஜெட் பிராண்டு அறிவிக்கப்பட்டால் அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளில் ஃபோக்ஸ்வேகன் குழுமத்திலிருந்து பட்ஜெட் கார்களை எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, June 2, 2014, 14:46 [IST]
English summary
Volkswagen is finding possibilities of introducing a new budget brand for Indian market. The German auto manufacturer's Chinese counterparts are close to finalizing the possibility.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+