இங்கிலாந்தில் புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ கார் அறிமுகம்!
இங்கிலாந்தில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய போலோ கார் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
வடிவமைப்பில் சில மாற்றங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட எஞ்சின் ஆப்ஷன்களில் அங்கு விற்பனைக்கு வர இருக்கிறது புதிய போலோ கார். புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ காரில் இருக்கும் சிறப்பம்சங்களின் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

விலை
பேஸ் மாடல் 11,000 பவுண்ட் விலையிலிருந்து டாப் மாடல் 19,715 பவுண்ட் விலை வரை விற்பனை செய்யப்பட உள்ளது.

எஞ்சின்
பல்வேறு பவர் கொண்ட எஞ்சின் ஆப்ஷன்களில் புதிய போலோ அங்கு விற்பனைக்கு வருகிறது. புதிய 1.0 லிட்டர் எம்பிஐ பெட்ரோல் எஞ்சின் 60 எச்பி மற்றும் 75 எச்பி பவர் கொண்ட மாடல்களில் கிடைக்கும். 1.2 லிட்டர் பெ்ரோல் எஞ்சின் மாடல் 90 எச்பி மற்றும் 112 எச்பி பவர் கொண்ட மாடல்களில் கிடைக்கும். மேலும், 150 எச்பி பவர் கொண்ட 1.4 லிட்டர் பெட்ரோல் மாடலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டீசல் மாடல்
1.4 லிட்டர் 3 சிலிண்டர் டீசல் எஞ்சின் மாடல் 75 எச்பி மற்றும் 90 எச்பி பவர் கொண்ட மாடல்களில் கிடைக்கும். புதிய போலோ காரில் பொருத்தப்பட்டிருக்கும் அனைத்து எஞ்சின்களும் யூரோ-6 மாசுக்கட்டுப்பாட்டு அம்சம் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

டிசைன்
டிசைனில் சிறிய அளவிலான மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 6 வேரியண்ட்டுகளில் புதிய போலோ கார் கிடைக்கும்.

பாதுகாப்பு அம்சங்கள்
ஹில் ஹோல்டு அசிஸ்ட், க்ரூஸ் கன்ட்ரோல், சிட்டி எமெர்ஜென்சி பிரேக்கிங் சிஸ்டம், டிரைவர் அலர்ட் சிஸ்டம், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் ஆகிய பாதுகாப்பு வசதிகளுடன் புதிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டிருக்கும்.

விற்பனை
அடுத்த மாதம் 23ந் தேதி முதல் இங்கிலாந்தில் புதிய போலோ காருக்கு முன்பதிவு துவங்கப்படுகிறது. வரும் ஜூலையில் டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கும்.


Click it and Unblock the Notifications








