ஃபோக்ஸ்வேகனின் கார் ஆலையை சுற்றி பார்த்து மகிழ்ந்த வாடிக்கையாளர்கள்!
புனே, சகனிலுள்ள ஃபோக்ஸ்வேகன் கார் ஆலையை உள்ளே சென்று பார்க்கும் அரிய வாய்ப்பை மும்பை வாடிக்கையாளர்கள் பெற்றனர்.
மும்பையை சேர்ந்த ஃபோக்ஸ்வேகனின் டீலர் ஒன்று இதற்கு ஏற்பாடு செய்திருந்தது. ஆலைக்குள் சென்ற வாடிக்கையாளர்கள், தங்களது கார் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதை நேரில் கண்டு ரசித்து மகிழ்ந்தனர். மேலும், ஆலைக்கு விருந்தினர்களாக வந்த வாடிக்கையாளர்களுக்கு கார் தயாரிப்பு முறை பற்றி ஃபோக்ஸ்வேகனின் எஞ்சினியர்கள் விளக்கினர்.

இது ஒரு புதுமையான அனுபவம் என்று வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். இதேபோன்று, அனைத்து கார் தயாரிப்பு நிறுவனங்களும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சில வாடிக்கையாளர்கள் கருத்து தெரிவித்தனர். இது விற்பனையை ஊக்குவிக்கும் என்றும் கூறினர்.


Click it and Unblock the Notifications








