இந்தியாவில் சீட் கார் பிராண்டை களமிறக்க ஃபோக்ஸ்வேகன் திட்டம்
ஸ்பெயினை சேர்ந்த சீட் கார் நிறுவனத்தின் தயாரிப்புகளை இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஃபோக்ஸ்வேகன் குழுமம் திட்டமிட்டுள்ளது.
ஃபோக்ஸ்வேகன், ஸ்கோடா ஆட்டோ, ஆடி, போர்ஷே, பென்ட்லீ, புகாட்டி, லம்போர்கினி உள்ளிட்ட ஏழு கார் பிராண்டுகளில் இந்தியாவில் கார் விற்பனை செய்து வருகிறது ஜெர்மனியை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் குழுமம். இந்தநிலையில், சீட் கார் நிறுவனத்தையும் இந்தியாவில் அறிமுகம் செய்ய ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது.

பட்ஜெட் மார்க்கெட்
பட்ஜெட் செக்மென்ட்டில் மாருதி, ஹூண்டாய் நிறுவனங்களுடன் போட்டி போட முடியவில்லை. இதனால், தனது கீழ் செயல்படும் ஸ்பெயினை சேர்ந்த சீட் கார் நிறுவனத்தின் தயாரிப்புகளை இந்தியாவில் களமிறக்க ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளதாக பிரபல வர்த்தக இதழ் ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது.

பட்ஜெட் மாடல்கள்
ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் விலையில் சீட் நிறுவனத்தின் பட்ஜெட் கார்களை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நஷ்டத்தில் சீ்ட்
ஐரோப்பிய மார்க்கெட்டில் சீட் நிறுவனம் பெரும் இழப்பை சந்தித்து வருகிறது. இதனை தவிர்க்கும் விதமாக இந்திய மார்க்கெட்டில் சீட் கார்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அசெம்பிள்
புனே அருகேயுள்ள சகனில் இருக்கும் ஃபோக்ஸ்வேகன் ஆலையில் சீட் கார்களை அசெம்பிள் செய்வதற்கும் முடிவு செய்யப்பட்டிருக்கிறதாம்.

மாடல்கள்
இபிஸா, லியோன், எம்ஐஐ மற்றும் அல்டியா உள்ளிட்ட கார் மாடல்களை சீட் நிறுவனம் தயாரித்து வருகிறது.


Click it and Unblock the Notifications








