லிட்டருக்கு 100கிமீ செல்லும் காரின் 4 சீட்டர் மாடலை தயாரிக்க ஃபோக்ஸ்வேகன் திட்டம்
ஒரு லிட்டர் டீசலுக்கு 100கிமீ மைலேஜ் செல்லும் எக்ஸ்எல்- 1 ஹைபிரிட் காரின் டெலிவிரி இரு மாதங்களுக்கு முன் ஃபோக்ஸ்வேகன் துவங்கியது. இந்த காருக்கு கிடைத்த வரவேற்பை கண்டு உற்சாகமடைந்துள்ள ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அடுத்ததாக, இதன் 4 சீட்டர் மாடலை தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளது.
மைலேஜில் எந்த பாதிப்பும் இல்லாமல் இந்த 4 சீட்டர் மாடலை உருவாக்குவதற்கு ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான முயற்சிகளை ஃபோக்ஸ்வேகன் துவங்கியிருக்கிறது.

கூடுதல் விபரம்
அடுத்தடுத்த ஸ்லைடுகளில் கூடுதல் தகவல்களை காணலாம்.

ஃபோக்ஸ்வேகன் எக்ஸ்எல்1
ஃபோக்ஸ்வேகன் எக்ஸ்எல்-1 என்ற பெயரிலான அந்த கார் ஓர் டீசல் ஹைபிரிட் மாடல். இரட்டை கதவுகள் கொண்ட இந்த கார் 795 கிலோ எடை கொண்டது. ஹைபிரிட் நுட்பத்தில் செல்லும்போது கணக்கீடுகளின்படி, ஒரு லிட்டருக்கு 100 கிமீ மைலேஜ் தரும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

அடுத்து...
எக்ஸ்எல்-1 கார் 2 சீட்டர் மாடல். இதன் 4 சீட்டர் மாடலை தயாரிக்கவே இப்போது ஃபோக்ஸ்வேகன் பரிசீலித்து வருகிறது. கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்டதாக இந்த புதிய காரை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.

பெயர்
மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வரும் புதிய கார் மாடலுக்கு எக்ஸ்எல்-2 என்று பெயரிட ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது.

4 இருக்கைகள்
புதிய ஃபோக்ஸ்வேகன் எக்ஸ்எல்-2 காரில் 4 பேர் செல்லும் வசதி கொண்டதாக வடிவமைக்க ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது. இதற்கு தக்கவாறு 4 கதவுகள் கொண்டதாக இருக்கும்.

மைலேஜில் சமரசம் இல்லை
4 பேர் செல்லும் மாடலாக வரும் எக்ஸ்எல்-2 காரில் 4 பக்கெட் இருக்கைகள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த புதிய இருக்கைகள் மூலம் காரின் எடை 80 கிலோ கூடுதலாகும். இருப்பினும், லிட்டருக்கு 100 கிமீ மைலேஜ் தருவதாக இருக்கும் வகையில் புதிய மாடலை வடிவமைக்க ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது.

மாற்றங்கள்
பின்புற சப்- ஃப்ரேம்கள், சஸ்பென்ஷன் அமைப்பு, பிரேக் சிஸ்டம் மற்றும் பாடி கட்டமைப்புகளில் மாற்றங்களை செய்ய ஃபோக்ஸ்வேகன் முடிவு செய்துள்ளது. ஆனால், எக்ஸ்எல்-1 காரில் பயன்படுத்தப்பட்ட பெரும்பான்மையான தொழில்நுட்பங்களை இந்த புதிய எக்ஸ்எல்- 2 காரிலும் பயன்படுத்தப்படும்.

எஞ்சின்
ஃபோக்ஸ்வேகன் எக்ஸ்எல்-1 காரில் பொருத்தப்பட்டிருக்கும் 47 பிஎச்பி பவரை அளிக்கும் அதே 800சிசி ட்வின் சிலிண்டர் டீசல் எஞ்சின் மற்றும் 27 பிஎச்பி பவரை அளிக்கும் மின் மோட்டாரையே புதிய எக்ஸ்எல்- 2 காரிலும் பொருத்தப்பட்டிருக்கும். கூடுதல் செயல்திறன் கொண்ட லித்தியம் அயான் பேட்டரி கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரவேற்பு
2 சீட்டர் மாடலான ஃபோக்ஸ்வேகன் எக்ஸ்எல்-1 கார் குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே தயாரிக்கப்பட உள்ளது. அந்த காருக்கு எதிர்பாராத வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில், 4 சீட்டர் மாடல் விற்பனைக்கு வரும்போது வரவேற்பு இன்னும் பலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். மேலும், 4 சீட்டர், லிட்டர் டீசலுக்கு 100 கிமீ மைலேஜ் போன்ற அம்சங்கள் நமக்கும் நாவூற வைக்கும் செய்தியாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








