ஃபோக்ஸ்வேகன் டைகுன் காம்பெக்ட் எஸ்யூவி கான்செப்ட் அறிமுகம்
டெல்லி ஆட்டோ எக்ஸ்போ மூலம் ஃபோக்ஸ்வேகன் டைகுன் காம்பெக்ட் எஸ்யூவி இந்திய மண்ணில் அடியெடுத்து வைத்துள்ளது.
இது தயாரிப்பு நிலையிலான கான்செப்ட் மாடலாகவே இருக்கிறது. எனவே, இந்த கான்செப்ட் மாடலுக்கும், தயாரிப்பு நிலைக்கு செல்லும் மாடலுக்கும் அதிக வித்தியாசங்கள் இருக்காது.

வடிவம்
இது 3,859 மிமீ நீளம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டைவிட நீளம் குறைவானது.

டிசைன்
மிக எளிமையான தோற்றமாக இருந்தாலும், இரட்டை புகைப் போக்கி குழாய், எல்இடி ஹெட்லைட், ரூஃப் ரெயில், சில் கார்டுகள் என ஏராளமான ஆக்சஸரீஸ்கள் மூலம் மிக கவர்ச்சியான தோற்றத்தை பெற்றிருக்கிறது. உற்பத்திக்கு செல்லும் மாடலில் டியூவல் எக்ஸ்சாஸ்ட் இருக்க வாய்ப்பில்லை.

ஸ்பேர் வீல்
இந்த மினி எஸ்யூவியின் பின்புற டெயில் கேட்டில் ஸ்பேர் வீல் பொருத்தப்பட்டிருப்பது இந்த மினி எஸ்யூவியின் தோற்றத்தை கொஞ்சம் பெரிதாக காட்டுகிறது.

எஞ்சின்
இந்த மினி எஸ்யூவியின் கான்செப்ட் மாடலில் 108 பிஎச்பி பவரையும், 175 என்எம் டார்க்கையும் வழங்கும் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இதுதவிர, 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மாடலும் எதிர்பார்க்கப்படுகிறது.

உற்பத்தி
2016ம் ஆண்டில்தான் இந்த புதிய மினி எஸ்யூவி உற்பத்திக்கு தயாராகும் என்று தெரிவிக்கப்படுகிறது. ரூ.7 லட்சம் விலையில் பேஸ் வேரியண்ட் விற்பனைக்கு வரலாம்.


Click it and Unblock the Notifications








