வாவ், வாவ், வாவ்... வால்வோவின் புதிய சைல்டு சீட்... பெற்றோர்களுக்கு வரப்பிரசாதம்!!

குழந்தைகளை காரில் பாதுகாப்பாக அழைத்து செல்வதற்கு சைல்டு சீட் எனப்படும் பிரத்யேக இருக்கை பயன்படுகிறது. காரின் பின்புறம் பார்த்து குழந்தை அமர்ந்து செல்லும் விதத்தில் கிடைக்கும் இந்த சைல்டு சீட்டுகள் விபத்துக்களின்போது குழந்தைகளை கழுத்து முறிவிலிருந்து காப்பாற்ற உதவுகின்றன.

ஆனால், இந்த சைல்டு சீட்டுகளை எடுத்து செல்வதும், கையாள்வதும் பெற்றோர்களுக்கு பெரும் சவால்களை சில நேரங்களில் தந்துவிடுவதுண்டு. மேலும், வெளிநாடு அல்லது வெளியூர் செல்லும்போது வாடகை கார்களில் பயணிக்க நேர்ந்தால், சைல்டு சீட்டை எடுத்துச் செல்வது பெரும் தொந்தரவாக இருக்கிறது.

இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணும் விதத்தில், பாதுகாப்புக்கு எப்போதுமே முக்கியத்துவம் கொடுத்தும் வரும் வால்வோ நிறுவனம் புதிய சைல்டு சீட் ஒன்றை உருவாக்கியுள்ளது. அந்த சைல்டு சீட்டின் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

ஏர் பில்லோ கான்செப்ட்

ஏர் பில்லோ கான்செப்ட்

ஏர் பில்லோ போன்று இந்த சைல்டு சீட்டை வேண்டும்போது காற்றடைத்து பயன்படுத்தலாம். தேவையில்லாதபோது, காற்றை வெளியேற்றிவிட்டு பையில் வைத்து எடுத்துச் செல்ல முடியும். எனவே, இதை கையோடு எடுத்து செல்வது பெற்றோர்களுக்கு மிக எளிதாக இருக்கும்.

காற்று நிரப்புவது எளிது?

காற்று நிரப்புவது எளிது?

இந்த சைல்டு சீட்டில் காற்று நிரப்புவதற்கா இன்பில்ட் காற்று பம்ப் ஒன்று பொருத்தப்பட்டிருக்கிறது. 40 வினாடிகளில் சைல்டு சீட்டில் காற்று நிரப்பி விடலாம். மேலும், புளூடூத் வசதி மூலம் ரிமோட் கன்ட்ரோல் முறையில் காற்று பிடிக்கும் வசதியும் இருக்கிறது.

சவுகரியம்

சவுகரியம்

காற்றை வெளியேற்றிவிடும்போது இந்த சைல்டு சீட் வெறும் 5 கிலோ எடை கொண்டதாக இருக்கும். துணி போன்று மடித்து பையில் வைத்து எடுத்து செல்லலாம்.

பிரத்யேக ஃபேப்ரிக்

பிரத்யேக ஃபேப்ரிக்

மடக்கி எடுத்து செல்லும் படகுகளில் பயன்படுத்தப்படும் உயர் ரக டிராப் ஸ்டிச் ஃபேப்ரிக்கில்தான் இந்த சைல்டு சீட்டும் தயாரிக்கப்படுகிறது.

உற்பத்தி?

இது தற்போது கான்செப்ட் நிலையில்தான் இருக்கிறது. அதேவேளை, தயாரிப்பு நிலையை எட்டும்போது இது வாடிக்கையாளர்களிடம் சிறப்பான வரவேற்பை பெறும் என்று இதன் டிசைனர் லாரன்ஸ் அபிலி தெரிவிக்கிறார். தற்போது சைல்டு சீட்டை தூக்கிக் கொண்டு அலைவதை தவிர்க்கும் பெற்றோர்களுக்கு, இந்த சைல்டு சீட் வர்த்தக ரீதியில் விற்பனைக்கு வரும்போது பெற்றோர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 16, 2014, 15:54 [IST]
English summary
Volvo, a pioneer when it comes to car safety, has now come out with, what is perhaps, the world's first inflatable child safety seat. Still a concept, these inflatable seats solve the chief concern by making them portable.
மேலும்... #volvo #four wheeler #வால்வோ
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+