வால்வோ கார் நிறுவனத்தின் சாஃப்ட்வேர் ஆர்டரை பெற்ற இன்ஃபோசிஸ்!
ஸ்வீடனை சேர்ந்த வால்வோ கார் நிறுவனத்தின் பல்வேறு துறை செயல்பாடுகளுக்கான முக்கிய மென்பொருள்களை தயாரித்து வழங்குவதற்காக ஆர்டரை இன்ஃபோசிஸ் நிறுவனம் பெற்றிருக்கிறது.
வால்வோ கார் நிறுவனத்தின் பல்வேறு இணையதளங்கள், மார்க்கெட்டிங் மற்றும் விற்பனை நகர்வுகளை கண்காணிக்கும் மென்பொருள்களை இன்போசிஸ் தயாரித்து வழங்கும்.

இதுதவிர, வாடிக்கையாளர் சேவை, உற்பத்தி, நிர்வாகம் போன்றவற்றிற்கு முதுகெலும்பாக இருக்கும் கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர்களை இன்ஃபோசிஸ் வழங்க உள்ளது. நீண்ட கால ஒப்பந்தத்தின் அடிப்படையில், வால்வோ கார் நிறுவனத்திடமிருந்து இந்த ஆர்டரை இன்ஃபோசிஸ் பெற்றிருக்கிறது.


Click it and Unblock the Notifications








