இந்தியாவில் புதிதாக 3 டிரக் மாடல்களை விற்பனைக்கு விட்டது வால்வோ

By Saravana

இந்தியாவில் ஐஷர் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து டிரக்குகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது வால்வோ.

விஇ என்ற பெயரில் இயங்கி வரும் இந்த கூட்டணி நிறுவனம் தற்போது 3 புதிய பிரிமியம் ரக டிரக்குகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. எம்எம் மற்றும் எஃப்எச் ஆகிய பெயர்களில் இரண்டு நீண்ட தூர பயன்பாட்டுக்கு ஏற்ற டிரக் மாடல்களும், எஃப்எம்எக்ஸ் என்ற சுரங்க பயன்பாட்டு டிரக் மாடலையும் விஇ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

இந்த ஆண்டின் சிறந்த டிரக்

இந்த ஆண்டின் சிறந்த டிரக்

தற்போது அறிமுகமாகியிருக்கும் வால்வோ எஃப்எச் என்ற டிரக் மாடல் இந்த ஆண்டின் சிறந்த சர்வதேச டிரக் மாடல் விருதை பெற்றுள்ளது.

நவீன டிரக்குகள்

நவீன டிரக்குகள்

தற்போது இந்தியாவில் விற்பனையாகும் வர்த்தக வாகனங்களில் மிகவும் நவீனமானவை வால்வோ டிரக்குகள்தான்.

வால்வோ எஃப்எம்

வால்வோ எஃப்எம்

வால்வோ எஃப்எம் டிரக்கில் பொருத்தப்பட்டிருக்கும் எஞ்சின் 440 எச்பி பவரையும், 2200என்எம் டார்க்கையும் வழங்கும். முன்பக்க ஆக்சில் 10 டன் எடையை தாங்கும் வல்லமை கொண்டதுடன், இந்த டிரக் 125 டன் எடையை தாங்கும் வகையில் இதன் ரியர் ஆக்சில் மறுவடிவமைப்பு செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வால்வோ எஃப்எம்எக்ஸ்

வால்வோ எஃப்எம்எக்ஸ்

வால்வோ எஃப்எம்எக்ஸ் டிரக்கில் 12.8 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த டிரக் 51 டன் வரை எடை சுமக்கும். இந்த டிரக்கில் ஐ- ஷிப்ட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டுள்ளது. மிக மோசமான சூழ்நிலைகளிலும் சிறந்த செயல்திறனை காட்டும்.

வால்வோ எஃப்எச்

வால்வோ எஃப்எச்

எஃப்எச் என்ற டிரக் வால்வோவின் மிகவும் வெற்றிகரமான மாடல். இந்த டிரக்கில் 520 எச்பி பவரை அளிக்கும் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இது 200 டன் எடையை இழுத்துச் செல்லும் வல்லமை கொண்டது. இந்த டிரக்கில் 14 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அவசரம் மற்றும் விபத்து காலத்தில் இதன் கூரையை திறந்து கொண்டு வெளியேற முடியும். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வால்வோ விற்பனையில் மிக முக்கிய பங்களிப்பை வழங்கி வருவதோடு, ஓட்டுனர்களிடமும், உரிமையாளர்கள் மத்தியிலும் நன்மதிப்பை பெற்ற மாடல்.

டிரான்ஸ்போர்ட் இன்ஃபர்மேஷன் சிஸ்டம்

டிரான்ஸ்போர்ட் இன்ஃபர்மேஷன் சிஸ்டம்

இந்த புதிய டிரக் மாடல்களுடன் டைனாஃப்ளீட் என்ற வால்வோவின் மேம்படுத்தப்பட்ட டிரான்ஸ்போர்ட் இன்பர்மேஷன் சிஸ்டமும் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய சிஸ்டம் மூலம் டிரக் இருக்கும் இடம், எரிபொருள் சிக்கனம், சர்வீஸ் இன்டர்வல் உள்ளிட்ட தகவல்களை பெறலாம். மேலும், டிரைவர் ஓய்வு நேரத்தை தெரிவிக்கும் வசதி, எந்தெந்த இடங்களில், எவ்வளவு பாரம் ஏற்றப்பட்டது, வழியில் எத்தனை முறை நிறுத்தப்பட்டது உள்ளிட்ட தகவல்களை இந்த தொழில்நுட்ப வசதி மூலம் பெற முடியும். இந்த சிஸ்டத்தின் மூலம் உரிமையாளர் அல்லது அலுவலகத்திலிருந்து டிரைவருடன் எளிதாக தொடர்பு கொள்ள முடியும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 29, 2014, 12:50 [IST]
English summary
VE commercial vehicles, a 50-50 joint venture between Eicher Motors Limited and Volvo Group, has launched three new trucks to their lineup in India. The company launched the FM and FH, which are long distance hauling trucks and the FMX, a solution to miners. The overall design of these trucks helps them carry extra load compared to previous models.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+