ஸ்பெஷல் பாடி கிட்டுடன் வால்வோ எக்ஸ்சி90 ஆர் டிசைன் மாடல் அறிமுகம்!
சர்வதேச அளவில் புதிய தலைமுறை வால்வோ எக்ஸ்சி90 எஸ்யூவி சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், புதிய வால்வோ எக்ஸ்சி90 எஸ்யூவியின் பிரத்யேக பாடி கிட் கொண்ட ஸ்போர்ட்டியான மாடலை வால்வோ அறிமுகம் செய்துள்ளது.
புதிய பம்பர்கள், பெரிய அலாய் வீல்கள், புதிய டிசைனிலான வீல் ஆர்ச் என முரட்டுத் தோற்றத்துடன் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இரட்டை எக்ஸ்சாஸ்ட் பைப்புகள், சில்வர் வண்ண ரூஃப் ரெயில்கள் மற்றும் ரியர் வியூ கண்ணாடிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

உட்புறத்தில் புதிய ஸ்போர்ட்ஸ் இருக்கைகள், பேடில் ஷிப்ட், ஸ்போர்ட் பெடல்களுடன் வந்துள்ளது. இந்த புதிய எஸ்யூவி மாடலில் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்கள் தவிர்த்து ஹைபிரிட் மாடலிலும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சமீபத்தில் எஸ்60 செடான் மற்றும் எக்ஸ்சி60 எஸ்யூவியின் ஆர்- டிசைன் மாடல்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதேபோன்று, புதிய வால்வோ எக்ஸ்சி90 எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு வரும்போது, இந்த ஆர் டிசைன் மாடலும் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








