47 மணிநேரத்தில் விற்று தீர்ந்த புதிய வால்வோ எக்ஸ்சி90 எஸ்யூவியின் ஃபர்ஸ்ட் எடிசன்!
புதிய வால்வோ எக்ஸ்சி90 காரின் அறிமுகத்தை கொண்டாடும் விதத்தில், ஃபர்ஸ்ட் எடிசன் என்ற பிரத்யேக மாடலை வால்வோ வெளியிட்டது. இந்த புதிய கார் மாடலை ஆன்லைன் மூலம் சில நாடுகளில் விற்பனை செய்வதாக அறிவித்தது.
லிமிடேட் எடிசன் மாடலாக வெளியிடப்பட்ட இந்த ஃபர்ஸ்ட் எடிசன் மாடலை வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வத்துடன் முன்பதிவு செய்தனர். விற்பனை துவங்கப்பட்டு 47 மணிநேரத்தில் ஃபர்ஸ்ட் எடிசன் மாடலின் அனைத்து கார்களும் விற்று தீர்ந்தன.

லிமிடேட் எடிசன்
புதிய வால்வோ எக்ஸ்சி90 எஸ்யூவியின் முதல் பதிப்பு மாடலில் மொத்தமாக 1927 எஸ்யூவிகள் தயாரித்து விற்கப்பட உள்ளன.

விறுவிறு முன்பதிவு
முதல் ஒருமணிநேரத்திலேயே பெரும்பாலான கார்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டது. இந்தநிலையில், முன்பதிவு துவங்கி 47 மணிநேரத்தில் அனைத்து கார்களுக்கும் முன்பதிவு முடிந்துபோனது. சராசரியாக ஒரு நிமிடத்திற்கு 7 கார்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டதாக வால்வோ தெரிவித்துள்ளது.

சிறப்பு என்ன?
ஃபர்ஸ்ட் எடிசன் மாடலில் தயாரிக்கப்படும் ஒவ்வொரு வால்வோ எக்ஸ்சி90 எஸ்யூவியிலும் வரிசை எண் குறிப்பிடப்பட்டிருக்கும்.

பேட்ஜ்
காரின் பின்புறம் டெயில்கேட்டில் ஃபர்ஸ்ட் எடிசன் மாடல் என்பதை குறிக்கும் பிரத்யேக பேட்ஜ் கொடுக்கப்பட்டிருக்கும்.

வண்ணம்
இந்த கார் ஒனிக்ஸ் பிளாக் என்ற கருப்பு வண்ணத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.

இன்டிரியர்
இன்டிரியரில் லெதர் நப்பா லெதர் வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இருக்கைகள், டேஷ்போர்டு ஆகியவற்றில் லெதர் வேலைப்பாடுகளின் உன்னதத்தை வாடிக்கையாளர்கள் அனுபவிக்கலாம்.

அலாய் வீல்
இந்த ஃபர்ஸ்ட் எடிசன் மாடலில் 21 இஞ்ச் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுளளன.

எஞ்சின் ஆப்ஷன்
பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் இந்த கார் வெளியிடப்பட்டது. பெட்ரோல் மாடலில் 320 எச்பி பவரை அளிக்கும் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டது. 8 ஸ்பீடு கியர்ட்ரோனிக் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் யூரோ-6 மாசுக்கட்டுப்பாட்டு அம்சம் கொண்டது.


Click it and Unblock the Notifications








