புதிய லம்போ ஹூராகென் காரில் அதிக ஆர்டர் செய்யப்படும் வண்ணம் எது தெரியுமா?!
லம்போர்கினி ஹூராகென் சூப்பர் கார் சர்வதேச அளவில் பெரும் வரவேற்பை பெற்ற சூப்பர் கால் மாடல் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. இதுவரை 1,000க்கும் மேற்பட்ட கார்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவிலும் சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்தியாவில் சூப்பர் கார்கள் மீதான மோகம் அதிகரித்து வரும் வேளையில் வந்திருக்கும் இந்த புதிய லம்போர்கினி கார் மாடல் நிச்சயம் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், லம்போர்கினி ஹூராகென் காரை முன்பதிவு செய்தோர் அதிகம் ஆர்டர் செய்துள்ள கலர் எது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க டீலர்
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரை சேர்ந்த லம்போர்கினி லாஸ்வேகாஸ் என்ற டீலர்ஷிப் இந்த தகவலை வெளியிட்டிருக்கிறது.

அதிக ஆர்டர்
வெர்டே மேன்டிஸ் என்ற இளம் கிளி பச்சை வண்ணத்தையே அதிக வாடிக்கையாளர்கள் தேர்வு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த வண்ணம் லம்போர்கினி ஹூராகென் காரின் பிரத்யேக வண்ணமாக வெளியிடப்பட்டது.

கூடுதல் விலை
பிற வண்ணங்களை காட்டிலும் வெர்டே மேன்டிஸ் வண்ணத்திற்கு கூடுதலாக 2,800 அமெரிக்க டாலர்கள் கூடுதல் விலையாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

இன்டிரியரும்...
வெர்டே மேன்டிஸ் வண்ணத்திற்கு ஏற்ற வகையிலேயே இன்டிரியர் வண்ணத்தையும் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்துள்ளனர். அல்கான்ட்ரா ஸ்போர்ட்டிவோ பை- கலர் என்ற கிளிபச்சை மற்றும் கருப்பு வண்ணக் கலவையிலான இரட்டை வண்ண இன்டிரியரையே பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தேர்வு செய்துள்ளனர். இதற்கு கூடுதலாக 2.190 டாலர் விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








