இன்றைய நிலையிலும் டீசல் கார்தான் சிறந்ததா? - நிபுணர்களின் விளக்கம்

இரு ஆண்டுகளாக பெட்ரோல் விலை தாறுமாறாக உயர்த்தப்பட்டு கார் வைத்திருப்போரை கதிகலங்க செய்தது. அடிக்கடி பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதால், டீசல் கார்களை வாங்குவதில் புதிய வாடிக்கையாளர்கள் அதிக மோகம் கொண்டனர். பெட்ரோலைவிட டீசல் விலை குறைவு என்பதுடன், அதிக மைலேஜ் தரும் என்பதே டீசல் கார்களை மொய்க்க காரணமாக இருந்தது. டீசல் மாடல்களை வாங்க பல மாதங்கள், ஏன் கிட்டத்தட்ட ஓர் ஆண்டு வரை காத்திருந்து ஸ்விஃப்ட் டீசல் மாடல் வாங்கி பெருமூச்சு விட்ட கதைகள் இங்கு ஏராளம்.

இந்த நிலையில், டீசல் விலையை மாதாமாதம் தவணை முறையில் மத்திய அரசு உயர்த்தி வருகிறது. இதனால், பெட்ரோல் விலையை டீசல் விலை நெருங்கத் தொடங்கியுள்ளது. இரண்டு எரிபொருளுக்கும் இடையில் மிக குறைவான விலை வித்தியாசம் எனும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதன் எதிரொலியால் கடந்த சில மாதங்களின் விற்பனை நிலவரப்படி, டீசல் கார்களை விட பெட்ரோல் கார்களின் விற்பனை அதிகரித்திருக்கிறது. இருப்பினும், டீசல் கார்களின் மீதான மோகம் இன்னும் முழுமையாக குறைந்தபாடில்லை. மேலும், பயன்பாட்டை பொறுத்து பெட்ரோல் காரா அல்லது டீசல் காரா என்பதை முடிவு செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.


நிலவரம்

நிலவரம்

கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னையில் பெட்ரோல், டீசல் விலைகளுக்கு இடையில் ரூ.21.61 வரை வித்தியாசம் இருந்தது. ஆனால், கடந்த மாதம் 31ந் தேதி நிலவரப்படி, இந்த விலை வித்தியாசம் 9.25 ஆக குறைந்திருக்கிறது. எனவே, டீசல் கார்களை வாங்குவதில் பொருளாதார ரீதியில் வாடிக்கையாளர்களுக்கு பலனில்லை என்று CRISIL என்ற ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பலனில்லை

பலனில்லை

கடந்த 2012ம் ஆண்டில் பெட்ரோல் கார் விலையுடன், டீசல் காருக்கு கூடுதலாக தரும் விலையை ஒப்பிட்டபோது, ரீசேல் மதிப்பின்பிடி, அடுத்த 2.5 ஆண்டுகளில் சமன் செய்ய முடியும் என்ற நிலை இருந்தது என்று சிஆர்ஐஎஸ்ஐஎல் ஆய்வு தெரிவிக்கிறது. கூடுதல் மைலேஜ், டீசல் விலை குறைவு என்பது போன்ற காரணங்களால் அந்த நிலை இருந்தது. ஆனால், இன்று டீசல் காரை வாங்கினால் கூடுதலாக கொடுக்கும் விலையை சமன் செய்வதற்கு 6 ஆண்டுகள் பிடிக்கும் என அந்த ஆய்வு தெரிவிக்கப்படுகிறது. ஆண்டுக்கு 10,000 கிமீ தூரம் ஓடுவதை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டிருக்கிறது. எனவே, இன்றைய நிலையில் டீசல் கார் வாங்குவதில் அர்த்தமில்லை என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது. ஆனால், டீசல் கார் வாங்குவதில் தவறில்லை எனவும், அது பயன்பாட்டை பொறுத்தது என்று சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

நிபுணர் விளக்கம்

நிபுணர் விளக்கம்

டெலாய்ட்டி இந்தியா நிறுவனத்தின் உயர் அதிகாரி குமார் கந்தசாமி கூறுகையில்," டீசல் கார்களுக்கான மவுசு முற்றிலும் குறைந்துவிட்டது என்று கூற முடியாது. பயன்பாட்டை பொறுத்தே இந்த முடிவு எடுக்க வேண்டும் என்று கூறி அதற்கான சில காரணங்களையும் கூறுகிறார்.

 பயன்பாடு

பயன்பாடு

டீசல் காரா அல்லது பெட்ரோல் காரா என்பதை பயன்பாட்டை வைத்து எளிதாக முடிவு செய்து கொள்ள முடியும். நாள் ஒன்றுக்கு 70 கிமீ தூரத்துக்கு மேல் பயணிக்க வேண்டியிருந்தால் டீசல் மாடலே சிறந்தது. அதேவேளை, சராசரியாக ஒரு நாளைக்கு 25 கிமீ பயணிப்பவர்களுக்கு பெட்ரோல் மாடலை தேர்வு செய்து கொள்ளலாம்.

வர்த்தக பயன்பாடு

வர்த்தக பயன்பாடு

தனிநபர் பயன்பாட்டுக்கு பெட்ரோல் கார்கள் மிகச்சிறந்தது. வியாபார நோக்கத்திற்காக பயன்படுத்துவோருக்கு டீசல் வேரியண்ட் சிறந்ததாக இருக்கும். மேலும், வியாபாரா ரீதியில் பயன்படுத்துவோருக்கு டீசல் கார்களே பொருளாதார ரீதியிலும் சிறப்பாக பொருந்தும்.

 மைலேஜ்

மைலேஜ்

3.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கொண்ட கார் லிட்டருக்கு 8 முதல் 9 கிமீ மைலேஜ் தரும். ஆனால், அதே ரக டீசல் எஞ்சின் 12 கிமீ வரை மைலேஜ் தரும். இது 25 சதவீதம் வரை கூடுதல் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கார்நேஷன் ஆட்டோ நிறுவனத்தின் துணைத் தலைவர் குணால் கட்டர் தெரிவிக்கிறார்.

 நீடித்த உழைப்பு

நீடித்த உழைப்பு

குணால் கட்டர் மேலும் கூறுகையில், நீடித்த உழைப்புக்கு டீசல் எஞ்சின்களே சிறப்பானது. பெட்ரோல் எஞ்சின்களே நீண்ட காலம் சிறப்பாக இருக்கும் என்ற கருத்து பரவலாக இருக்கிறது. ஆனால், சிறப்பான பராமரிப்பில் உள்ள டீசல் எஞ்சின்தான் நீடித்த உழைப்பையும், ஆயுளையும் கொண்டதாக இருக்கும். டீசல் எஞ்சின்கள் 3 லட்சம் கிமீ முதல் 5 லட்சம் கிமீ வரை சிறப்பாக செயல்புரியும். பிரச்னைகள் இல்லாமல் ஓடும். ஆனால், பெட்ரோல் எஞ்சின்கள் ஒரு லட்சம் கிமீ தூரம் வரை சிறப்பாக இருக்கும் என்று கூறுகிறார். அதேவேளை, டீசல் எஞ்சின் பராமரிப்பு செலவு சிறது கூடுதல் என்பது மறக்க இயலாது என்கிறார்.

மதிப்பு

மதிப்பு

பயன்படுத்தப்பட்ட கார்களில் பெட்ரோல் கார்களைவிட டீசல் கார்களுக்கே நம் நாட்டில் மதிப்பு அதிகம். ஒரு சில ஆண்டுகளில் பெட்ரோல் கார்களின் மதிப்பு வெகுவாக குறையும். ஆனால், டீசல் கார்கள் பராமரிப்பை பொறுத்து மிகச் சிறப்பான ரீசேல் மதிப்பு கொண்டுள்ளன.

 பெர்ஃபார்மென்ஸ்

பெர்ஃபார்மென்ஸ்

டீசல் எஞ்சினைவிட பெட்ரோல் எஞ்சின் மிகச்சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தக்கூடியவையாக இருக்கின்றன. இலகு எடை கொண்ட பாகங்களால் பெட்ரோல் கார்கள் மிகச்சிறப்பான செயல்திறனை அளிக்க முடிகிறது. அதேவேளை, நவீன தொழில்நுட்பத்தில் வரும் டீசல் எஞ்சின்களுடன் சாதாரண பெட்ரோல் எஞ்சின்களை ஒப்பிட முடியாது.

பயன்பாடு

பயன்பாடு

எனவே, பயன்பாட்டை பொறுத்து கார் மாடலை தேர்வு செய்வது முக்கியம். எரிபொருள் விலையை பார்த்து வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்று அட்வைஸ் செய்கின்றனர் சந்தை நிபுணர்கள்.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 24, 2014, 17:56 [IST]
English summary
The Automobile industry expects the momentum for petrol cars to gather speed. In 2010-11, the price differential between petrol and diesel stretched to almost Rs 25 a litre forcing many customers to opt for diesel cars. Since then, analysts say, thanks to a hard sell by auto companies to its dealers, the customer is now more informed about which fuel powered car to choose depending on the usage.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+