ஃபியட் கார்களுக்கு டிசம்பர் டிஸ்கவுண்ட் ஆஃபர் - விபரம்
விற்பனையை ஊக்குவிப்பதற்காக சிறப்பு சேமிப்புச் சலுகைகளை ஃபியட் கார் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஃபியட் லீனியா மற்றும் புன்ட்டோ எவோ கார்களுக்கு சிறப்புச் சேமிப்பு சலுகைகளை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

லீனியா செடான் காருக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரையில் சேமிக்கும் வாய்ப்பை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும். இதேபோன்று, புன்ட்டோ எவோ ஹேட்ச்பேக் காருக்கு ரூ.30,000 வரையிலான சேமிப்பை பெறும் வாய்ப்பு இருக்கிறது.
இதுதவிர, மூன்று ஆண்டு வாரண்டி தவிர்த்து, கூடுதலாக இரண்டு ஆண்டுகளுக்கான நீட்டிக்கப்பட்ட வாரண்டியையும் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், இந்த சிறப்புச் சேமிப்பு சலுகைகள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கூடுதல் விபரங்களுக்கு அருகாமையிலுள்ள ஃபியட் டீலரை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications








