டிசம்பர் என்றாலே டிஸ்கவுண்ட்தானே... கார்கள் மீதான சிறப்புச் சலுகைகள் விபரம்!
ஆண்டுக் கடைசியில் கார் விற்பனை மந்தமடைவது வாடிக்கை. புத்தாண்டில் புதிய கார் வாங்கும் எண்ணத்துடன் பலர் கார் வாங்கும் திட்டத்தை தள்ளிப்போடுவதால் கார் விற்பனையில் சுணக்கம் ஏற்படுகிறது.
இதனை தவிர்த்து விற்பனையை ஊக்கப்படுத்தும் விதத்தில், அதிக அளவில் கார் நிறுவனங்கள் சலுகைகளை வழங்குவது வாடிக்கை. அந்த வகையில், டிசம்பர் துவங்கியவுடனேயே சில கார் மாடல்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

சலுகைகள்
அடுத்தடுத்த ஸ்லைடுகளில் சிறப்புச் சலுகைகள் விபரங்களை காணலாம்.

ஃபோர்டு ஃபிகோ
ஃபோர்டு ஃபிகோ காருக்கு ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ், ரூ.29,000 மதிப்புடைய இன்ஸ்யூரன்ஸ், ரூ.5,000 மதிப்புடைய லாயல்டி போனஸ் ஆகியவற்றை பெறும் வாய்ப்பு இருக்கிறது. மொத்தமாக ரூ.54,000 மதிப்புடைய சலுகைகளை ஃபோர்டு ஃபிகோ காருக்கு சேமிக்க முடியும். அடுத்த ஆண்டில் புதிய ஃபிகோ மாடல் வர இருப்பதும் அதிகபட்ச சலுகைகள் வழங்கப்படுவதற்கு ஒரு காரணமாக கூறலாம்.

செவர்லே பீட்
செவர்லே பீட் காரை வாங்கும் வாடிக்கையாளர்கள் மூன்று ஆண்டுகளுக்கான பஜாஜ் அலையன்ஸ் இன்ஸ்யூரன்ஸை இலவசமாக பெறும் வாய்ப்புள்ளது. இதுதவிர, ரூ.25,000 எக்ஸ்சேஞ்ச் போனசாகவும், ரூ.20,000 லாயல்டி போனசாகவும் பெற்றுக் கொள்ளலாம். ரூ.65,000 மதிப்புடைய சலுகைகளை பெறலாம்.

ஹூண்டாய் இயான்
ஹூண்டாய் இயான் காருக்கு ரூ.30,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ், ரூ.12,000 மதிப்புடைய இலவச இன்ஸ்யூரன்ஸ் ஆகியவற்றை பெறும் வாய்ப்பு உள்ளது மொத்தமாக ரூ.42,000 மதிப்புடைய சலுகைகளை பெறும் வாய்ப்பு இருக்கிறது.

மாருதி வேகன் ஆர்
மாருதி வேகன் ஆர் காருக்கு ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் போனசாகவும், ரூ.30,000 நுகர்வோர் சிறப்பு சேமிப்புச் சலுகையாகவும் பெற்றுக் கொள்ளலாம். ரூ.50,000 மதிப்புக்கு மாருதி வேகன் ஆர் காருக்கு சிறப்புச் சலுகைகளை பெற முடியும்.

ஹூண்டாய் சான்டா ஃபீ
ஹூண்டாய் சான்டா ஃபீ எஸ்யூவிக்கு ரூ.2 லட்சம் வரையிலான சேமிப்பை பெறும் வாய்ப்பு இருக்கிறது. காரை முன்பதிவு செய்யும்போது சலுகைகளை டீலர்களில் கேட்டுப் பெற்றுக்கொள்வது அவசியம்.

கூடுதல் விபரங்கள்
கூடுதல் விபரங்களுக்கு அருகாமையிலுள்ள சம்பந்தப்பட்ட கார் நிறுவனத்தின் டீலர்களை அணுகவும்.


Click it and Unblock the Notifications








