மினிமம் ரூ.60,000, மேக்ஸிமம் ரூ.1.5 லட்சம்... மஹிந்திரா ஆஃபர்!
வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் பல்வேறு கவர்ச்சிகர சலுகைகளை மஹிந்திரா நிறுவனம் வழங்குகிறது. வரும் 28ந் தேதி வரை இந்த சிறப்பு சேமிப்புச் சலுகைகள் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.60,000 முதல் ரூ.1.5 லட்சம் வரையில் சேமிக்கும் வகையில் இந்த சிறப்புச் சலுகைகளை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. சலுகை விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ
சமீபத்தில் விற்பனைக்கு வந்த மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவிக்கு சிறப்புச் சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை. மற்ற அனைத்து கார் மாடல்களுக்கும் சிறப்புச் சலுகைகளை பெற்றுக் கொள்ளலாம்.

மஹிந்திரா எக்ஸ்யூவி 500
மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவிக்கு ரூ.65,000 மதிப்பிலான சேமிப்புச் சலுகைகளை பெறும் வாய்ப்புள்ளது.

மஹிந்திரா பொலிரோ
மஹிந்திரா பொலிரோ எஸ்யூவிக்கு ரூ.60,000 வரையில் சேமிக்கும் வாய்ப்பை மஹிந்திரா வழங்குகிறது.

மஹிந்திரா குவான்ட்டோ
மஹிந்திரா குவான்ட்டோ காம்பேக்ட் எஸ்யூவிக்கு ரூ.75,000 மதிப்பிலான சிறப்புச் சலுகைகளை பெற முடியும்.

மஹிந்திரா ஸைலோ
மஹிந்திரா ஸைலை எம்பிவி காருக்கு ரூ.83,000 மதிப்புடைய சலுகைகளை பெறும் வாய்ப்புள்ளது.

சாங்யாங் ரெக்ஸ்டன்
சாங்யாங் ரெக்ஸ்டன் பிரிமியம் எஸ்யூவி மாடலுக்கு அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை சேமிப்பு சலுகைகளை பெறும் வாய்ப்பு இருக்கிறது.

மஹிந்திரா வெரிட்டோ
மஹிந்திரா வெரிட்டோ செடான் காருக்கு ரூ.60,000 வரையிலான சேமிப்புச் சலுகைகளை பெற முடியும்.

மஹிந்திரா வைப்
மஹிந்திரா வைப் காருக்கும் ரூ.60,000 மதிப்புடைய சலுகைகளை பெறலாம்.

சலுகைகள்
எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் கார்ப்பரேட் போனஸ் உள்ளிட்டவை அடங்கிய மொத்த சலுகை மதிப்பு ஸ்லைடுகளில் வழங்கப்பட்டிருக்கிறது. கூடுதல் தகவல்களுக்கு அருகாமையிலுள்ள மஹிந்திரா டீலரை அணுகவும்.


Click it and Unblock the Notifications








