ஸகாடோ கைவண்ணத்தில் உருமாறிய லம்போ கல்லார்டோ!
இத்தாலியின் மிலன் நகரை சேர்ந்த ஸகாடோ நிறுவனம் கார் கஸ்டமைஸ் செய்வதில் புகழ்பெற்றது. பிரபல சொகுசு கார்களை தனது கைவண்ணத்தில் அசத்தலாக மாற்றிக் கொடுப்பதில் கைதேர்ந்தது.
இந்த நிலையில், உற்பத்தி நிறுத்தப்பட்டு விட்ட லம்போர்கினி கல்லார்டோ காரின் ஸபெஷல் மாடல்களை ஸகாடோ கஸ்டமைஸ் செய்து கொடுத்து வருகிறது. கல்லார்டோ 5- 95 என்ற பெயரில் வெளியிடப்பட்டு வரும் இந்த வரிசையில் 5 லம்போ கல்லார்டோ கார்களை கஸ்டமைஸ் செய்து கொடுப்பதாக தெரிவித்துள்ளது. இந்த வரிசையில் இரண்டாவது லம்போர்கினி காரை ஸகாடோ வெளியிட்டுள்ளது.

கூடுதல் தகவல்கள்
கூடுதல் தகவல்களையும், படங்களையும் அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

இது முதல் கார்
லம்போ கல்லார்டோ 5-95 வரிசையிலான ஸ்பெஷல் மாடல்களில் முதலாவது கார் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த கார் சேகரிப்பாளர் ஆல்பர்ட் ஸ்பைஸ் என்பவருக்காக கஸ்டமைஸ் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, தற்போது இரண்டாவது மாடல் வெளியிடப்பட்டுள்ளது.

டிசைன்
கல்லார்டோவின் ஒரிஜினல் பாடியை எடுத்துவிட்டு ஸகாடோ கைவண்ணத்தில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. முட்டை வடிவ முகப்பு கிரில், வட்ட வடிவ கூரை, அரைவட்ட வடிவ வீல் ஆர்ச், வட்ட வடிவ டெயில் லைட்டுகள் ஆகியவற்றின் மூலம் ஒரிஜினல் கல்லார்டோ காரிலிருந்து டிசைன் வித்தியாசப்படுத்தப்பட்டிருக்கிறது.

மஞ்சள் வண்ணம்
5-95 வரிசையில் இரண்டாவது மாடலான இந்த கார் மஞ்சள் வண்ணத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

எஞ்சின்
பாடி டிசைனில் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தாலும், எஞ்சினில் மாற்றங்கள் இல்லை. 562 எச்பி பவரை அளிக்கும் 5.2 லிட்டர் வி10 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். ஆனால், வாடிக்கையாளரின் விருப்பத்தின்பேரில் இந்த காரின் எஞ்சினை அதிக பவர் கொண்டதாக ட்யூனிங் செய்து கொடுக்கவும் ஸகாடோ தயாராக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

விலை
விலை விபரங்கள் வெளியிடப்படவில்லை. 5 -95 வரிசையில் மொத்தம் 5 கார்கள் விற்பனை செய்யப்பட உள்ளதாக ஸகாடோ தெரிவித்துள்ளது. அதில், இது இரண்டாவது கார் மாடலாகும்.
Photo Source: Facebook


Click it and Unblock the Notifications








