முதலில் டெல்லி... அப்புறம் சென்னைக்கு வருகிறது ஸீபி எலக்ட்ரிக் ரிக்ஷா!

By Saravana

டெல்லியில் ஸீபீ என்ற புதிய எலக்ட்ரிக் ஆட்டோரிக்ஷாக்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. சுவீடன் நாட்டை சேர்ந்த க்ளீன் மோஷன் என்ற நிறுவனத்தின் தயாரிப்பான ஸீபீ இந்தியா வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் கடந்த ஆண்டு டிரைவ்ஸ்பார்க் தளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

ஆட்டோமொபைல் ஆக்சஸெரீஸ் மீது 75 சதவீதம் தள்ளுபடி - விபரம்!

இந்தநிலையில், இந்த புதிய எலக்ட்ரிக் ஆட்டோரிக்ஷா இந்தியா வருவது உறுதியாகியுள்ளது. அடுத்த மாத இறுதியில் 25 ஸீபீ எலக்ட்ரிக் ஆட்டோரிக்ஷாக்கள் டெல்லியில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்த புதிய வகை வாகனத்துக்கான பிரத்யேக விதிமுறைகளை வகுப்பது குறித்து டெல்லி அரசு பரிசீலித்து வருகிறது.

முதலில் டெல்லியிலும், பின்னர் சென்னை உள்ளிட்ட நாட்டின் முக்கிய பெரு நகரங்களிலும் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. பஜாஜ் ஆட்டோரிக்ஷாக்களுக்கு கடும் நெருக்கடியை தர வரும் இந்த புதிய எலக்ட்ரிக் ஆட்டோரிக்ஷாவின் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் ஸ்லைடரில் வழங்கப்பட்டுள்ளன.


டெல்லியில் தரிசனம்

டெல்லியில் தரிசனம்

டெல்லியில் கடந்த வாரம் நடந்த சுவீடன் இந்தியா நோபல் மெமோரியல் வீக் என்ற நிகழ்ச்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த புதிய ஆட்டோரிக்ஷா இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவது குறித்து க்ளீன் மோஷன் நிறுவனத்தின் சிஇஓ., குறிப்பிடுகையில்," டெல்லியில் முதலில் எங்களது ஸீபீ எலக்ட்ரிக் ஆட்டோரிக்ஷாவை அறிமுகம் செய்ய இருக்கிறோம். மேலும், குர்கான், மும்பை, சென்னை மற்றும் புனே ஆகிய நகரங்களில் இருந்தும் இந்த புதிய எலக்ட்ரிக் ஆட்டோரிக்ஷா குறித்த விசாரணைகள் வந்த வண்ணம் உள்ளன," என்றார்.

 இருக்கை வசதி

இருக்கை வசதி

இந்த எலக்ட்ரிக் ஆட்டோரிக்ஷாவில் 3 பேர் பயணிக்க முடியும். ஓட்டுனருக்கு மட்டுமின்றி, பயணிகளுக்கும் சீட் பெல்ட்டுகள் கொடுக்கப்பட்டிருக்கும். இதனால், அதிக பாதுகாப்பு கொண்டதாக க்ளீன் மோஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சார்ஜ் ரேஞ்ச்

சார்ஜ் ரேஞ்ச்

இந்த எலக்ட்ரிக் ஆட்டோரிக்ஷாவில் லித்தியம் அயான் பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 100 கிமீ தூரம் வரை பயணிக்கும்.

வேகம்

வேகம்

சிறப்பான ஏரோடைனமிக் டிசைனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் ஆட்டோரிக்ஷா மணிக்கு 45 கிமீ வேகம் வரை இந்த ஸீபீ ஆட்டோரிக்ஷா செல்லும்.

கிராஷ் டெஸ்ட்

கிராஷ் டெஸ்ட்

மானேசரில் உள்ள ஐசிஏடி அமைப்பின் கிராஷ் டெஸ்ட் சோதனை முடிவுகளுக்காக க்ளீன் மோஷன் நிறுவனம் காத்திருக்கிறது. தயாரிப்புக்கு அனுமதி கிடைத்தவுடன் இந்தியாவை சேர்ந்த தனது கூட்டணி நிறுவனத்துடன் இணைந்து பரீதாபாத்தில் உள்ள ஆலையில் இந்த புதிய எலக்ட்ரிக் ஆட்டோரிக்ஷாவை அசெம்பிள் செய்து விற்பனை செய்ய உள்ளது.

விலை

விலை

இந்திய மதிப்பில் ரூ.4.88 லட்சம் விலை கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. கார்பன் புகையால் மூச்சுத் திணறி வரும் பெருநகரங்களுக்கு இந்த புதிய எலக்ட்ரிக் ஆட்டோரிக்ஷா பெரும் வரப்பிரசாதமாக அமையும் வாய்ப்புள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, November 3, 2014, 13:33 [IST]
English summary
The capital city, Delhi, will get 25 e-rickshaws by this year end, called the Zbees. Manufactured by a by a Swedish company, and partnered with another Indian company, these zero emission rickshaws will be manufactured in Faridabad.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+