2015 கோயம்புத்தூர் வாகன கண்காட்சி இன்று துவங்கியது: 3 நாட்கள் நடக்கிறது

By Ravichandran

கோவையில், நான்காம் ஆண்டு மோட்டார் கண்காட்சி இன்று துவங்கியது. 3 நாட்களுக்கு நடைபெற இருக்கும் இந்த 2015 கோயமுத்தூர் ஆட்டோ ஷோ கொடிசியா வர்த்தக வளாகத்தில் நடைபெறுகின்றது.

கோயமுத்தூர் மோட்டார் பார்ட்ஸ் டீலர்ஸ் அஸோசியேஷன் [CMPDA]ஆட்டோ ஷோ 2015 என்றும் அழைக்கபடுகிறது. இன்று துவங்கிய இந்த ஆட்டோ ஷோ, வரும் 13ந் தேதி வரை நடைபெறுகின்றது.

இந்த 2015 கோயமுத்தூர் ஆட்டோ ஷோ நடத்தபடுவதற்கான முக்கிய நோக்கமே, ஆட்டோமொபைல் துறையை சேர்ந்த உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், டிஸ்ட்ரிபியூட்டர்கள், டெக்னீஷியன்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்டவர்கள் ஒன்றாக சந்திக்க ஒரு பொது தடம் தேவையாக உள்ளதும் தான் என தெரிகிறது.

இந்த ஆட்டோ ஷோவில், இலகு ரக வாகனங்கள், நடு ரக வாகனங்கள் மற்றும் கன ரக வாகனங்கள், கார்கள், டிராக்டர்கள், இரு சக்கர வாகனங்களுக்கான உதிரிபாகங்கள் மற்றும் லூப்ரிகேண்ட்கள், ஸ்பேர் பார்ட்ஸ் மற்றும் ஆக்சஸரீஸ் உள்ளிட்டவை காட்சிபடுத்தபடுகிறது.

coimbatore-auto-show-to-generate-600-crore-business

டெல்லி, ஜெய்பூர், ஓசூர், லூதியானா, மும்பை, பெங்களூரு மற்றும் ஹைதரபாத் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல நிறுவனங்கள் தங்களது பொருட்களை காட்சிப்படுத்தியுள்ளனர்.

கடந்த கோயம்புத்தூர் ஆட்டோ ஷோவின் 3-வது எடிஷனில், 150 ஸ்டால்கள் வைக்கபட்டு, சுமார் 300 கோடி ரூபாய் வர்த்தகம் நிகழ்ந்தது. இந்த 2015 கோயமுத்தூர் ஆட்டோ ஷோவில் 170 ஸ்டால்கள் வைக்கபட்டிருக்கின்ற நிலையில், 600 கோடி ரூபாய் வரையிலான வர்த்தகம் நடைபெறலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

Most Read Articles
English summary
Fourth edition of the Coimbatore Auto Show began in Coimbatore. 2015 Coimbatore Auto Show is held as a 3 day event between December 11 to December 13, 2015. 2015 Coimbatore Auto Show is expected to generate Rs. 600 Crore or more.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X