டெட்ராய்ட் ஆட்டோ ஷோவில் கவர்ச்சிகரமான டாப் - 5 பிக்கப் டிரக் மாடல்கள்!

By Saravana

அமெரிக்கர்களுக்கு பிக்கப் டிரக் மாடல்கள் மீது ஆர்வம் அதிகம். அங்கு தனிநபர்களுக்கு ஏற்ற சிறப்பம்சங்களுடன் பல பிக்கப் டிரக் மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

எனவே, அமெரிக்க வாடிக்கையாளர்கள் மற்றும் பார்வையாளர்களை கவர்வதற்காக டெட்ராய்ட் ஆட்டோ ஷோவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு புதிய பிக்கப் டிரக் மாடல்களை காட்சிக்கு வைத்துள்ளன. அதில், கவர்ச்சிகரமான 5 பிக்கப் டிரக் மாடல்கள் உங்கள் பார்வைக்காக...


பிக்கப் டிரக் மாடல்களுக்கு வரவேற்பு

பிக்கப் டிரக் மாடல்களுக்கு வரவேற்பு

ஒவ்வொரு மார்க்கெட்டிலும் ஒரு குறிப்பிட்ட கார் மாடல்களுக்கு அதிக வரவேற்பு இருக்கும். அந்த வகையில், அமெரிக்காவில் அதிகம் முக்கியத்துவம் பெற்றிருக்கும் தனிநபர்களுக்கு ஏற்ற அமசங்கள் கொண்ட பிக்கப் டிரக் மாடல்களுக்கு நல்ல வரவேற்பு உண்டு. இதன் காரணமாக டெட்ராய்ட் ஆட்டோ ஷோவிலும் பிக்கப் டிரக் மாடல்களுக்கு தனி மரியாதை இருக்கிறது. அடுத்தடுத்த ஸ்லைடுகளில் 5 முக்கிய மாடல்களை காணலாம்.

ஃபோர்டு எஃப்- 150 ராப்டர்

ஃபோர்டு எஃப்- 150 ராப்டர்

அமெரிக்காவில் ஃபோர்டு பிக்கப் டிரக்குகள் விற்பனையில் முக்கிய பங்களிப்பை வகித்து வருகின்றன. இந்த நிலையில், டெட்ராய்ட் ஆட்டோ ஷோவில் தரிசனம் தந்து வரும் ஃபோர்டு எஃப் - 150 ராப்டர் பிக்கப் டிரக் மாடல் நவீனத்துவம் ததும்பும் டிசைனில் பார்வையாளர்களை வசீகரித்து வருகிறது. இந்த பிக்கப் டிரக் மாடலில் 411 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்ட 3.5 லிட்டர் ஈக்கோபூஸ்ட் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 10 ஸ்பீடடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷந் கொண்டது. எல்இடி லைட், இரவு நேரத்தில் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்கான கேமரா அசிஸ்ட் டிரைவிங், இலகு எடையும் உறுதிமிக்க பாடி போன்றவை இதன் சிறப்பம்சங்கள். அடுத்த ஆண்டு விற்பனைக்கு வருகிறது.

2. ஹூண்டாய் சான்டா க்ரூஸ்

2. ஹூண்டாய் சான்டா க்ரூஸ்

அமெரிக்காவில் பிக்கப் டிரக் மோகத்தை பார்த்து தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்துக்கும் ஆசை பிறந்துவிட்டது. வழக்கம்போல் தன் கைநயத்தில் மிகச்சிறப்பான டிசைனில் ஓர் கான்செப்ட் மாடலை டெட்ராய்ட் ஷோவில் பார்வைக்கு வைத்துள்ளது. இந்த பிக்கப் டிரக் மாடலில் 190 எச்பி பவரை வெளிப்படுத்தும் ஆற்றல் வாய்ந்த 2.0 லிட்டர் டர்போடீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பிக்கப் டிரக் மிகச்சிறப்பான மைலேஜை தரும் என்று ஹூண்டாய் பெருமை தெரிவிக்கிறது. எச்டிராக் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டது. விற்பனை குறித்த தகவல் இல்லை.

3. நிசான் டைட்டான்

3. நிசான் டைட்டான்

ஜப்பானிய டிசைன் தாத்பரியத்தை உணர்த்தும் வகையில், டெட்ராய்ட் ஆட்டோ ஷோவில் நிசான் காட்சிக்கு வைத்திருக்கும் நிசான் டைட்டான் பிக்கப் டிரக் மாடலும் அமெரிக்கர்களை கவர்ந்து வருகிறது. வி8 டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் இந்த பிக்கப் டிரக் 310 எச்பி பவரை அளிக்கும். 5.5 டன் எடையை இழுக்கும் திறன் பெற்றது. இந்த ஆண்டு இறுதியில் அங்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

 4. ராம் 1500 ஈக்கோ டீசல் மற்றும் ராம் 1500 ரெபெல்

4. ராம் 1500 ஈக்கோ டீசல் மற்றும் ராம் 1500 ரெபெல்

டெட்ராய்ட் ஆட்டோ ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் கவர்ச்சிகரமான மாடலில் இதுவும் ஒன்று. கம்பீரமான தோற்றம், ஏர் சஸ்பென்ஷன், 10 இஞ்ச் கிரவுண்ட் கிளியரன்ஸ் போன்றவை இதன் சிறப்பம்சங்கள். பார்வையாளர்கள் அதிகம் கூடும் அரங்குகளில் இதுவும் ஒன்றாக இருக்கிறது.

5. டொயோட்டா டாக்கோமா

5. டொயோட்டா டாக்கோமா

ஏராளமான சிறப்பம்சங்களுடன் கவர்ச்சியையும் வாரிக்கொண்டு வந்திருக்கும் இந்த புதிய டொயோட்டா பிக்கப் டிரக்கில் 3.5 லிட்டர் வி6 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. வி6 எஞ்சின் தவிர்த்து 4 சிலிண்டர் எஞ்சின் மாடலிலும் கிடைக்கும். 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல்களில் பெற்றுக்கொள்ளலாம். ஹில் அசிஸ்ட், கிராவ்ல் கன்ட்ரோல், கீலெஸ் ஸ்டார்ட், மூன்ரூஃப், டியூவல் ஸோன் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், பிளைன்ட் ஸ்பாட் மானிட்டர், ரியர் கிராஸ் டிராஃபிக் அலர்ட் போன்ற நவீன தொழில்நுட்ப வசதிகள் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Friday, January 16, 2015, 12:15 [IST]
English summary

 Let's take a look at 5 of the best looking pickup trucks that were on display during the Detroit Auto Show:
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+