தெஸ்லாவுக்கு போட்டியாக புதிய எலக்ட்ரிக் எஸ்யூவியை தயாரிக்கும் ஆடி!
தெஸ்லா மாடல் எக்ஸ் எஸ்யூவிக்கு நேரடி போட்டியாக புத்தம் புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலை ஆடி கார் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஜெனிவா மோட்டார் ஷோவில் இந்த தகவலை ஆடி கார் நிறுவனம் வெளியிட்டது.
இது தெஸ்லா மாடல் எக்ஸ் எலக்ட்ரிக் எஸ்யூவியைவிட மிகவும் பிரிமியமாக அம்சங்களை கொண்டிருக்கும் என்பதும் உறுதியாகியுள்ளது. எம்எல்பி பிளாட்ஃபார்மில் உருவாகும் பெயரிடப்படாத இந்த புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி ஆர்8 இ-ட்ரான் காரின் தொழில்நுட்பங்களை பகிரந்துகொள்ளும்.

இந்த புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி ஒரு முழுமையான சார்ஜ்க்கு 500 கிமீ தூரம் வரை பயணிக்கும் என்பதும் விசேஷம். புதிய பாகங்களால் இந்த எஸ்யூவியின் எடை வெகுவாக குறைக்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. கோடீஸ்வர வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆடியின் இந்த புதிய எஸ்யூவி திட்டம் பெரும் ஆவலை கிளப்பியிருக்கிறது.


Click it and Unblock the Notifications








