மேம்படுத்தப்பட்ட புதிய மஹிந்திரா தார் சிஆர்டிஇ மாடல் அறிமுகம்!
வடிவமைப்பிலும், வசதிகளிலும் மேம்படுத்தப்பட்ட மஹிந்திரா தார் எஸ்யூவியின் சிஆர்டிஇ மாடல் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. டைரக்ட் இன்ஜெக்ஷன் எஞ்சின் மாடலில் மாற்றங்கள் செய்யப்படவில்லை.
நாசிக்கில் நேற்று இரவு நடந்த நிகழ்ச்சியில் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் மஹிந்திரா தார் எஸ்யூவியின் புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

வடிவமைப்பு மாற்றங்கள்
புதிய பம்பர், புதிய வீல் ஆர்ச்சுகள், புதிய சைடு ஃபுட் ஸ்டெப்ஸ், புதிய கெனாப்பி கூரை, கிளியர் லென்ஸ் கொண்ட ஹெட்லைட்டுகளுடன் மஹிந்திரா தார் எஸ்யூவியின் சிஆர்டிஇ மாடல் வந்துள்ளது.

இன்டிரியர்
புதிய தார் சிஆர்டிஇ மாடலில் புதிய இரட்டை வண்ண டேஷ்போர்டு, சொகுசான புதிய இருக்கைகள், புதிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், புதிய ஏசி வென்ட்டுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. பூட்டி திறக்கும் வசதி கொண்ட கிளவ் பாக்ஸ், 12v சார்ஜர், புதிய ஸ்டீயரிங் வீல் மற்றும் கியர் நாப் ஆகியவையும் குறிப்பிட்டு கூற வேண்டிய மாற்றங்கள்.

எஞ்சின் ஆப்ஷன்
இரண்டு வித டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள் தொடர்கிறது. ஒன்று 63 பிஎச்பி சக்தியை அதிகபட்சமாக வெளிப்படுத்தும் 2.5 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றொன்று 105 பிஎச்பி சக்தியை வெளிப்படுத்தும் 2.4 லிட்டர் சிஆர்டிஇ டீசல் எஞ்சின் உள்ளது. இரண்டிலும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. மொத்த விற்பனையில் 70 சதவீதம் 2.5 லிட்டர் கொண்ட மஹிந்திரா தார் எஸ்யூவியாகவும், மீதமுள்ளவை மட்டுமே 2.4 லிட்டர் சிஆர்டிஇ டீசல் மாடலாகவும் இருக்கிறது என மஹிந்திரா தெரிவித்துள்ளது.

வண்ணங்கள்ரெட் ரேஜ், ஃபியரி பிளாக், ராக்கி பீஜ், டைமன்ட் ஒயிட் மற்றும் மிஸ்ட் சில்வர் ஆகிய 5 வண்ணங்களில் கிடைக்கும்.ரெட் ரேஜ், ஃபியரி பிளாக், ராக்கி பீஜ், டைமன்ட் ஒயிட் மற்றும் மிஸ்ட் சில்வர் ஆகிய 5 வண்ணங்களில் கிடைக்கும்.
ரெட் ரேஜ், ஃபியரி பிளாக், ராக்கி பீஜ், டைமன்ட் ஒயிட் மற்றும் மிஸ்ட் சில்வர் ஆகிய 5 வண்ணங்களில் கிடைக்கும்.

விலை
ரூ.8.03 லட்சம் நாசிக் எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications








