2015 ஃபோக்ஃபெஸ்ட் கொண்டாட்டம் இந்தியா முழுவதும் துவக்கம்
பண்டிகை காலத்தையொட்டி, ஃபோக்ஸ்வேகன் இந்தியா 2015 ஃபோக்ஃபெஸ்ட் என்ற சிறப்பு சலுகைகள் கொண்டாட்டத்தை அறிவித்துள்ளது.
இந்த கொண்டாடங்களின் ஒரு பகுதியாக, பல்வேறு வகையான சலுகைகளையும், தள்ளுபடிகளையும் வழங்குகிறது. ஃபோக்ஸ்ஃபெஸ்ட் கொண்டாட்டம் 30 நாட்கள் நடக்கிறது.
இந்த ஃபோக்ஸ்ஃபெஸ்ட் கொண்டாட்டத்தின்போது போலோ, வென்ட்டோ மற்றும் ஜெட்டா கார்களுக்கு ஆஃபர்களை வாடிக்கையாளர்கள் பெற முடியும். அதோடு மட்டுமல்லாமல், சிறப்பு சுற்றுலா திட்டம், ஏராளமான சலுகைகள், நிச்சய பரிசுகள் உள்ளிட்டவையும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். நாடுமுழுவதும் உள்ள அனைத்து ஃபோக்ஸ்வேகனின் டீலர்களிடமும் இந்த சலுகைகளை பெற முடியும்.

ஃபோக்ஸ்வேகன் கார்களை வாங்கும் வாடிக்கையாளர்கள், பைனான்ஸ் விஷயத்திலும் சேமிப்பை பெறலாம். போலோ ஹாட்ச்பேக் காரின் மீது ஒரு ஆண்டிற்கு 3.99 சதவிகிதத்தில் பைனான்ஸ் வசதிகள் கிடைக்கும். ஜெட்டா செடான் மீது, ஒரு ஆண்டிற்கு 9.99 சதவிகிதத்தில் கடன் திட்ட வசதிகள் கிடைக்கின்றது.
வென்ட்டோ ஹைலைன் பிளஸ் மாடலின் மீது, ஒரு ஆண்டிற்கு குறைந்தபட்சமாக 9.75 சதவிகித வட்டி விகிதத்தில் பைனான்ஸ் வசதி கிடைக்கும். இவை அனைத்தையும் தாண்டி, இப்போது வாங்கப்படும் அனைத்து கார்களின் மீதும் ஒரு வருடத்திற்கான இலவச இன்சூரன்ஸ் வசதியும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், வாடிக்கையாளர்கள் அனைவரும் லக்கி டிரா எனப்படும் அதிர்ஷ்ட குலுக்கலில் சேர்த்து கொள்ளப்படுவர். இந்த குலுக்கலில் ப்ளாபுங்கட் மல்டிமீடியா டேப்லட் வெல்லும் வாய்ப்பும் உள்ளது.
இதை தவிர, ஃபோக்ஸ்வேகன் வாகனங்களை எக்ஸ்சேஞ்ஜ் செய்பவர்களும், உபயோகிக்கப்பட வாகனங்களை வாங்குபவர்களும் சுற்றுலா பயண வாய்ப்புகளை பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








