டிரைவ்ஸ்பார்க் தளத்தின் இந்த ஆண்டின் சிறந்த கார் ரெனோ க்விட்!

By Saravana

இந்த ஆண்டு கார் மார்க்கெட்டுக்கு மிகச்சிறப்பான ஆண்டாக அமைந்தது. கார் தயாரிப்பு துறைக்கு மட்டுமின்றி, புதிய வரவுகள் மற்றும் தொடர்ந்து வழங்கப்பட்ட சலுகைகளால் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் மிகச்சிறந்த டீலுடன் இந்த ஆண்டில் புதிய கார் கனவை நிறைவேற்றிக் கொண்டனர்.

வாடிக்கையாளர்களின் ஆர்வத்திற்கு தீணி போடவும், பலமான சந்தைப்போட்டியின் காரணமாகவும், பல புதிய கார் மாடல்கள் வரிசை கட்டின. இருந்தாலும், அதில் இரண்டு புதிய கார் மாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை வாடிக்கையாளர் மத்தியில் பெற்றுள்ளன. ஒன்று ரெனோ க்விட் கார், மற்றொன்று ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி.

ரெனோ க்விட்

இரண்டு கார்களும் இதுவரை 75,000க்கும் அதிகமான முன்பதிவுகளை பெற்று, மிக நீண்ட வெயிட்டிங் பீரியடுடன் அசத்தி வருகின்றன. அனைத்து அம்சங்களிலும் தம்தம் செக்மென்ட்டுகளில், இந்த இரண்டு கார்களுமே இந்த ஆண்டின் மிகச்சிறப்பான மாடல்களாக கூறலாம்.

இருப்பினும், சில விஷயங்களின் அடிப்படையில் இந்த ஆண்டின் சிறந்த கார் மாடல் என்ற பெருமையை ரெனோ க்விட் பெறுகிறது. ரூ.15 லட்சத்தில் கார் வாங்குவோர்க்கு மிகச்சிறந்த மாடல் ஹூண்டாய் க்ரெட்டா. தோற்றம், வசதிகள் என அனைத்திலும் சிறந்த மாடல்.

ரெனோ க்விட் கார் இன்டீரியர்

ஆனால், குறைந்த பட்ஜெட்டுடன் கார் கனவுடன் காத்திருப்பவர்களுக்கும், நடுத்தர வருவாய் பிரிவினருக்கும், பட்ஜெட் விலையில் ஓர் சிறந்த தயாரிப்பாக ரெனோ க்விட் கார் மாறியிருக்கிறது. தோற்றம், வசதிகள், இடவசதி, மைலேஜ், பூட் ரூம், விலை என அனைத்து விதத்திலும் ரெனோ க்விட் கார் கொடுக்கும் பணத்திற்கு மிகச்சிறப்பான சாய்ஸ்.

எனவே, டிரைவ்ஸ்பார்க் தளத்தின் இந்த ஆண்டின் சிறந்த கார் மாடல் என்ற பெருமையை ரெனோ க்விட் கார் பெறுகிறது. இந்த ஆண்டு நாம் வெளியிட்ட கார் செய்திகள் பிரிவிலும், டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட் பிரிவிலும் மிக மிக அதிக பார்வைகளை ரெனோ க்விட் கார் பெற்று வாடிக்கையாளர்கள் மற்றும் வாசகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றிருக்கிறது.

ரெனோ க்விட் பின்புறம்

எமது டெஸ்ட் டிரைவ் அனுபவத்தின் அடிப்படையிலும், வாசகர்களின் ஏகோபித்த ஆதரவை வைத்தும், டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் இந்த ஆண்டின் சிறந்த கார் என்ற பெருமையை ரெனோ க்விட் கார் பெறுகிறது. இந்த காரின் மதிப்புக்கு வலு சேர்க்கும் விதமாக விரைவில் கூடுதல் சக்தி கொண்ட 1.0 லிட்டர் எஞ்சின் மற்றும் ஆட்டோமேட்டிக் [ஏஎம்டி] கியர்பாக்ஸ் கொண்ட மாடல்களிலும் ரெனோ க்விட் கார் வர இருப்பதையும் நினைவுப்படுத்த விரும்புகிறோம்.

ரெனோ க்விட் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

 ரெனோ க்விட் பக்கவாட்டு டிசைன்
Most Read Articles
English summary
2016 Drivespark Indian Car of The year Winner: Renault Kwid.
Story first published: Thursday, December 31, 2015, 13:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X